பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 நினைவு அலைகள் முன்னே ஒய்வு பெற்றவர்களின் பென்சன், பழைய குறைந்த நிலையிலேயே, பற்றாக்குறையாக இருப்பது சரியல்ல. அப்போதைக்கப்போது, பென்சன் விழுக்காட்டை, அதன் அளவை உயர்த்தியபோது, முன்னரே ஒய்வு பெற்றவர்களின் பென்சனை மறுபரிசீலனை செய்ய வேண்டியது நீதி. புதுக் கணக்குப்படி, பென்சன் தொகையை முடிவுசெய்து பழைய பாக்கியைத் தராமல், புதிய ஆணை பிறப்பித்த நாள் முதல், அதிக பென்சன் கொடுத்தல்தான் முறை. இப்படிச் செய்வதால், குடிமுழுகிப் போகாது. பென்சன் உயர்வுபெறும் பழைய ஊழியர்கள் காயகற்பம் உண்டவர்கள் அல்ல; நெடுநாள் பென்சன் வாங்கிக் கொண்டு வாழப்போவதில்லை. இந்த அநீதியை எண்ணி, எண்ணி ஏங்குவோர் பல கிழவர்கள். சொல்லிச் சொல்லி, வழி தெரியாமல் அமைதி பெறுவோர் சில கிழவர்கள். உண்மை உழைப்புக்குக் குட்டை பென்சனா? குட்டைப் பென்சனில் ஒய்வு பெற்றவர், சின்னசாமி. பின்னர் ஒய்வு பெற்றவர், பணிக்காலம் குறைவாக இருந்தும் அதிக பென்சன் பெறுகிறார்கள். இதை எண்ணி, எண்ணித் தன்னை வாட்டி வதைத்துக் கொள்ள வில்லை. தன்னை மறந்து, தொடர்ந்து, பொதுத்தொண்டு ஆற்றுகிறார். மணி உயர்நிலைப்பள்ளியின் தாளாளராகவும், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவ மனையின் செயலராகவும் பணிபுரிந்து கொண்டிருக் கிறார். "என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் நன்னெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவதால், எழுபது வயது இளைஞராக வாழ்கிறார். திரு. சின்னசாமியின் தந்தை, பெரியவர் நாராயணசாமி தொண்ணுற்று ஐந்து வயதுவரை நன்றாக வாழ்ந்தார். மைந்தர் சின்னசாமி விசுவேசுவரய்யாவைப் போன்று நூறாண்டு நல்வாழ்வு வாழட்டும். சின்னசாமியின் பெருந்தொண்டு, அவருக்குப் பயன்படுவதில்லை: குடும்பத்திற்குள் முடங்கி விடுவதில்லை; பரந்த வெளி உலகத்திற்கே பயன்படுகிறது. திரு. சின்னசாமியின் வாழ்நாள் வளர வளர, மக்கள் அறிவும் நல்வாழ்வும் ஊக்கமும் வளர்ந்து கொண்டேயிருக்கும். திரு. சின்னசாமியின் மணிவிழாவில் அவருக்குப் பொன்னாடை போர்த்தும் பேற்றினைக் கோவை நண்பர்கள் எனக்கு அன்புடன் அளித்தார்கள். அப்போது நான் கூறியபடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/382&oldid=787227" இலிருந்து மீள்விக்கப்பட்டது