பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 341 'எனக்குக் கணக்குப்பாடம் சொல்லிக்கொடுத்து உதவிய, என் நெருங்கிய நண்பர் திரு. சின்னசாமி என்னோடு கொண்டிருந்த நட்புறவை, தனக்காக என்றும் பயன்படுத்தியதில்லை; தமக்கு எவ்விதச் சலுகையும் தேடிக்கொண்டது இல்லை; வேண்டியவர்களுக்காகவும் என்னை நெருங்கியதில்லை. அது மட்டுமா? எப்போதும் எவரைப் பற்றியும் என்னிடம் கோள் சொன்னதில்லை'. கோவை நண்பர் திரு நா. சின்னசாமியின் கதையை இத்தோடு விட்டு, என் கதைக்குத் திரும்புவோம். கோவை நகரைப் பார்த்தபிறகு, உதகமண்டலத்திற்குப் புறப்பட்டேன். கோவையில் இருந்து நீலகிரி விரைவு வண்டியில் பயணம் ஆனேன். மூன்றாம் வகுப்புப் பயனமே. எழில் கொஞ்சும் நீலகிரி நான் முதன் முறை 1930இல் கண்ட நீலகிரி, இன்றைய நீலகிரியில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. மேட்டுப் பாளையத்திலேயே மலையின் குளுமை வரவேற்றது. மலையேற ஏறக் குளுமை அதிகமாயிற்று. மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி அடிவாரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையோரங்களில் வானளாவ வளர்ந்திருந்த மரங்கள் கைகோர்த்துப் பந்தலிட்டாற்போல் காட்சியளித்தன. இப்போதிருப்பதுபோல், இரு பக்கங்களிலும் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பாக்கு மரங்கள் பசுமையூட்டின. மலைத்தொடரின் நிலை என்ன? பசுமை, பசுமை. எப்பக்கம் திரும்பினும் பசுமை. வகை வகையான இலைகள் வண்ணப் பூக்கள், இயற்கையின் ஆட்சியைக் கண்டேன். 'இவ்வளவு உயரமான மரங்களா இவ்வளவு பருமனான மரங்களா!' என்று எண்ணி வியந்தேன். சுரண்ட வந்த ஆங்கில ஆட்சி, நீலகிரியின் இயற்கை வளத்தைப் பொறுப்போடு பாதுகாத்து வந்தது. ஒட்டை எண்ணி நாட்டைப் பாழாக்கவில்லை. அக்காலத்திலும் நீலகிரி யில் தேயிலை, காப்பித் தோட்டங்கள் இருந்தன. இந்திய மன்னர்களின், ஆங்கில அதிகாரிகளின், பாதிரிமார் *ளின் ஆங்கிலக் கறுப்புத் துரைகளின் பங்களாக்கள் இருந்தன. அவற்றிற்குத் தேவையான குறைந்த அளவிற்கே, இயற்கையாக 'ளர்ந்த மரங்களை வெட்டினார்கள். நூற்றாண்டுக் காடுகளை மூன்று திங்களில் அழித்த பெருமையை அன்னிய ஆட்சி தேடிக்கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/383&oldid=787228" இலிருந்து மீள்விக்கப்பட்டது