பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 357 உண்ணும் போட்டியில் முதல் பரிசு நான் விக்டோரியா விடுதியிலிருந்தபோது, மூன்று உணவுப் பிரிவுகள் இருந்தன. மாமிசப் பிரிவு ஒன்று: காய்கறி உணவுப் பிரிவுகள் இரண்டு. அவற்றில் ஒன்று பார்ப்பனருக்கு; மற்றொன்று பார்ப்பனரல்லாதாருக்கு. பார்ப்பனரல்லாதார், காய்கறி உணவுப் பிரிவிற்கு ஒர் ஆண்டு, என் நண்பர் திரு. பாலசுப்பிரமணியம் என்பவர் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய தேர்தலுக்கு நான் உதவி செய்துள்ளேன். அவர் அடிக்கடி லட்டுதான் போடுகிறார். புதுப்புது இனிப்புப் பண்டங்கள் போடவில்லை என்று நண்பர்கள் என்னிடம் புகார் செய்தார்கள். அதை அவருக்கு அறிவித்தேன். அதைப் பொருட்படுத்தாமல், பொடியன்! நீ எவ்வளவு சாப்பிட்டு விடப்போகிறாய்? நீ சும்மா இரு என்று பதிலளித்தார். அந்த அறைகூவலை ஏற்றுக் கொண்டேன். ஒரு விடுமுறை நாள், நானும் பாலசுப்பிரமணியமும் சிற்றுண்டிப் போட்டியில் ஈடுபட்டோம். பன்னிரண்டாவது குலாப்ஜானை உண்டதும் அவர் வாந்தி எடுத்தார். நான் பதின்மூன்றை விழுங்கி வெற்றி பெற்றேன். அப்புறம் உண்பதில் போட்டி இட்டதில்லை. 45. நோய்வாய்ப்பட்டேன் என் காய்ச்சலும் விடுதி டாக்டரும் பொருளியல் சிறப்பு வகுப்பில் நான் படிக்கையில், இரண்டாம் பருவத்தில் எனக்குக் காய்ச்சல் கண்டது. விடுதியின் மருத்துவர் டாக்டர் நாராயணசாமி முதலியார் அழைக்கப்பட்டார். அவர் என்னைச் சோதித்தார். - கலவை மருந்து ஒன்றை எழுதிக் கொடுத்தார்; படுக்கையில் ஒய்வாக இருக்க ஆணையிட்டார். மருந்து வேலை செய்யவில்லை. காய்ச்சல் குறையவில்லை. அதிகமாக இருந்தது. அச்சம் தலைதுாக்கியது. மூன்றாம் நாள், என்னைப் பார்க்க வந்த மருத்துவரிடம் என்னுடைய கவலையைத் தெரிவித்தேன். 'இன்ன காய்ச்சல் என்று இன்னும் விளங்கவில்லை; ஆனாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. முன்பு 'ஏ' கலவை கொடுத்தேன். அதில் பலன் இல்லை. இப்போ "பி" கலவை கொடுக்கப் போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/399&oldid=787257" இலிருந்து மீள்விக்கப்பட்டது