பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந து: சுநதர பெ டி வலு ΑΗΣΙ ΕΙ டாக்டர் குருசாமியிடம் ஆங்கில வைத்தியம் குறிப்பிட்ட நாள், விடியற்காலை மூன்று மணிக்கு இரட்டை மாட்டு வண்டியில் நெய்யாடுபாக்கத்தை விட்டுப் புறப்பட்டேன். அப்பாவும் மாமாவும் உடன் வந்தார்கள். விடியும் வேளை வாலாஜாபாத் புகைவண்டி நிலையத்தைச் சேர்ந்தோம். மூவருக்கும் முதல் வகுப்புப் பயனச்சீட்டைப் பெற்றார் என் தந்தை. புகைவண்டி உரிய நேரத்தில் வந்தது. வண்டியேறினோம். ஒரே திகைப்பு! அதுவரை நான் முதல் வகுப்பு வண்டியுள் நுழைந்ததில்லை. மெத்தையின் மென்மை, கண்ணாடியின் பொலிவு; முகங் கழுவும் தொட்டியின் பளபளப்பு, இவை என்னை வியப்பில் ஆழ்த்தின. மாட்டு வண்டிப் பயணத்தில் ஏற்பட்ட களைப்பில், சைதாப்பேட்டை வரும் வரையில் தூங்கிவிட்டேன். எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் நண்பர் ப.ச. கைலாசம் கார், எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அதில் ஏறி, டாக்டர் குருசாமி பங்களாவிற்குச் சென்றோம். நுழைவாயிலிலிருந்து நீண்ட வரிசை. பலர் காத்துக் கொண்டிருந்தார்கள். நானும் வரிசையில் நின்றேன். தந்தையும் மாமாவும் உடன் இருந்து என்னைத் தாங்கிக் கொண்டார்கள். முன்னே நின்ற பெரியவர் ஒருவர், திரும்பிப் பார்த்தபோது, என்னைப் பார்த்தார். அறிமுகம் இல்லாத அவர் என்மேல் பரிவு கொண்டார். அடுத்து இருந்தவர்களிடம் பேசி, என்னைச் சில இடம் முன்னே நகரச் செய்தார். எனவே, என் முறை விரைவில் வந்தது. பங்களாவின் முன் அறைக்குள் நோயாளியாகிய நான் மட்டும் நுழைந்தேன். உயர்ந்த ஒல்லியான மனிதர் ஒருவர், சாளரத்தின் மேல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன்னே ஒரு நாற்காலி இருந்தது. என்னைக் கண்டதும் நாற்காலியைக் காட்டினார். அதில் உட்காரும்படி அமைச்சாடை காட்டினார்; கீழ்ப்படிந்தேன். டாக்டர் குருசாமி, நாக்கை நீட்டச் சொன்னார். நீட்டினேன். நொடியில் பார்த்து முடித்துவிட்டார். கண்களைத் திறந்து பார்த்தார். அடுத்த நொடி சீட்டெழுதிக் கொடுத்தார். 'போய் இந்த மருந்தை வாங்கிச் சாப்பிடு, ' என்று சொல்லிக் காத்துக் கொண்டிருப்பவரைக் கைகாட்டி அழைத்தார். ஆ எனக்குப் பெரிய ஏமாற்றம். இரு நொடிகளில் நோயை எப்படிக் কাঠে) பிடித்துவிட்டார் என்று ஐயப்பட்டேன். எனவே, படக்கென்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/401&oldid=787265" இலிருந்து மீள்விக்கப்பட்டது