பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 நினைவு அலைகள் மாணவர்கள், அடைக்கலம் புகும் இடம் வெங்கடேசுவரா விடுதி ஆகும். விக்டோரியா விடுதி விதிமுறைகளில் விலக்கு பெறப் பரிந்துரை அவ்விடுதி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையின் தெற்குக் கோடியில் உள்ளது. அக்காலத்தில் அக்கோடி, டிராம் வண்டிகளின் இறுதி நிலையமாக இருந்தது. விடியற்காலம் முதல் இரவு பத்துமணிவரை டிராம் வண்டிகளின் ஒலம் விடுதி மாணவர்களின் காதுகளைக் கிழிக்கும். மக்கள் கூட்டமும் அதிகம், படிப்பதற்கான அமைதிச்சூழ்நிலை இராது. ஒருமுறை என் தந்தை, மாமா, நான் ஆகிய மூவரும் வெங்கடேசுவரா விடுதிக்குச் சென்று நோட்டம் பார்த்தோம். அவ்விடுதியை நான் விரும்பவில்லை. அவர்களுக்கும் அது பிடிக்கவில்லை. எனவே, விக்டோரியா விடுதியிலேயே நான் எப்படியாவது தொடர்ந்து தங்க வேண்டுமென்று பெரியவர்கள் நினைத்தார்கள். பலருக்கும் உதவியாளராக விளங்கிய செங்கற்பட்டு திரு. மே. வேதாசலத்தை அணுகினோம். விவரத்தைப் பொறுமையாகக் கேட்டபின், சில நாள்கள் கழித்து மறுபடியும் வந்து பார்க்கும்படி, திரு. வேதாசலம் சொல்லி யனுப்பினார். அப்படியே, திரு. வேதாசலத்தை மீண்டும் கண்டோம். அவர் ஏற்கெனவே இதுபற்றி நடவடிக்கை எடுத்திருந்தார். அப்போது செங்கற்பட்டில், பள்ளி ஆய்வாளராக இருந்தவர் திரு. வேதாசலத்திற்கு வேண்டியவராம். அவரிடம் நெ.து. சு. தொடர்ந்து விக்டோரியா விடுதியில் தங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினாராம். ஆய்வாளர் அதற்கான வழி காண முனைந்தார். பொதுக்கல்வி இயக்குநர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டார். அலுவலகத்தில் உள்ளவர்களில் எவர் பேச்சு விக்டோரியா விடுதிக்காவலரிடம் எடுபடுமோ அவரோடு பேசி, ஏற்பாடு செய்து விட்டாராம். என்ன ஏற்பாடு? வெங்கடேசுவரா விடுதியில் சேர்ந்தேன் 'விக்டோரியா விடுதியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் மட்டுமே தங்கலாம் என்னும் விதிக்குக் கட்டுப்பட்டு, அங்கு இருந்து விலகிவிட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/404&oldid=787269" இலிருந்து மீள்விக்கப்பட்டது