பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ66 நினைவு அலைகள் சில ஆண்டுகளுக்கு முன், இந்திய நாடாளுமன்றப் பேரவைத் தலைவராக இருந்த திரு. கே. சதானந்த எக்டே, என்னுடன் படித்தவர். மாநிலக் கல்லூரி மாணவர் பேரவைக்குச் செயலாளர் ஆனவர். அத்தேர்தலில் நான் எக்டேக்குத் துணையாக நின்று உதவும்படி வாய்த்தது. நிலைக்கு ஏற்ற நினைப்புத் தேவை; அதற்கேற்ற செயல்பாடும் தேவை. இருபதாம் நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில், அடிதடியில் குதிப்பவர் எவராயினும், பண்பாட்டின் பாலபாடமும் அறியாதவர். எவ்வளவு ஆத்திரமூட்டும் நிலையிருப்பினும் மாணவர்கள், ஒரு கை பார்த்துவிடக் குதிப்பது தவறு; பெருந்தவறு. சமத்துவபுரிக்கு விரைகிற காரை நெடுஞ்சாலையில் தென்பட்ட சிறிய ஆணியைப் பொறுக்குவதற்காகப் பின்பக்கம் ஒட்டுவதாகும். மாநிலக் கல்லூரியில் நாங்கள் படித்த பொருளியல் சிறப்புப் பாட வரிசை பற்றிச் சில சொற்கள். நிலக் குவியல், நீராவிப் பொறிகள் கண்டுபிடித்தல், தொழிற்புரட்சி, மலை மலையான உற்பத்தி, இலாபப் பெருக்கம், முதல் குவியல், முதலாளித்துவம் - அதன் துணை விளைவுகள். அவற்றைப் போக்கக்கூடிய சோசியலிசம், அடுத்து கம்யூனிசம் ஆகிய காண்டங்களைக் கொண்டிருந்தது எங்கள் பாடத்திட்டம். 47. பேராசிரியர் கள்ளுக்காரன் அறியாமையும் அனுபவமும் பேராசிரியர் கள்ளுக்காரன் - இயற்பெயரே அதுதான். எங்களுக்குப் பொருளியல் வகுப்பு எடுப்பார். அவர் நல்ல அறிஞர். புதுப்புது நூல்களைக் கற்றுக் கொண்டிருந்தவர். சிரியன் கிறித்துவர் 'ஆயிரக்கணக்கான ஆள்கள் நாள்கணக்கில் பாடுபட்டு உற்பத்தி செய்யும்போது உற்பத்தியான பொருள்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அவற்றின் விலையோ மிகவும் அதிகமாக இருந்தது. 'இயந்திரங்களின் உதவியால் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. நிறைய உற்பத்தி செய்ய முடிந்ததால், குறைந்த விலைக்கு விற்க முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/408&oldid=787277" இலிருந்து மீள்விக்கப்பட்டது