பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 நினைவு அலைகள் எப்படியோ பேசிவிட்டேன்; மன்னித்தருள்க என்று வேண்டிக் கொள்வதற்கு வந்துள்ளேன்' என்று நண்பர் கூறினார். பளிச்சென்று, ஆனால் அமைதியாக நான் அ திை மறந்துவிட்டேனே! இப்போது ஏன் நினைவுபடுத்துகிறீர்கள்?' என்று பேராசிரியர் சொன்னார். 'மெய்யாகவே வருந்துகிறேன்' என்று மானவர் சொல்ல, 'மெய்யாகவே மறந்து விட்டேன்' என்று பேராசிரியர் சொல்ல, எங்கள் நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டது. ஏற்கெனவே பேராசிரியரிடம் போகுமுன், பேசித் திட்டமிட்டபடி, 'அய்யா! எங்களுக்குத் தங்கள் நேரடிப் பார்வையிலுள்ள நூல்கள் இரண்டொன்று வேண்டும். இப்போது தர இயலுமா? பின்னர் வந்து பெற்றுக் கொள்ளலாமா?' என்று இருவருமே பேராசிரியரைக் கேட்டோம். பேராசிரியர் அலமாரியைத் திறந்தார். சில நூல்களை எடுத்து மேசையின்மேல் போட்டார். எந்தெந்த நூலில் எந்தெந்தப் பகுதி சிறப்பாயிருக்கும் என்று சுட்டிக்காட்டினார். ஆளுக்கு ஒரு நூலைக் கடன் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினோம். பேராசிரியர் மெய்யாகவே மன்னித்து மறந்துவிட்டாரா? காலம் வரும் வரை நல்லவர்போல் நடித்து, காலம் வந்ததும் பழிவாங்கி விடுவாரா? இக்கேள்விகள் என் நண்பரைக் குடைந்தன. எனக்கும் அதே அய்யப்பாடு. எப்படித் தெளிவுபடுத்திக் கொள்வது? பேராசிரியரின் பெருந்தன்மை நண்பரும் நானும் கலந்து ஆலோசித்தோம். பேராசிரியரை ஆழம் பார்க்க முடிவு செய்தோம்; திட்டமிட்டோம். திட்டமென்ன? வாரந்தோறும் இருவரும் சேர்ந்து, பேராசிரியரிடம் போவது; அவருடைய நேரடிப்பார்வையில் இருந்த நூலகத்திலிருந்து நூல்களைக் கடன் கேட்பது. இப்படித் தொடர்ந்து செய்தால், அவர் உள்ளத்தின் ஆழத்தில் இருப்பது, ஒரு நாள் வெளிப்படக்கூடும்; நெஞ்சின் புண் ஆறாதிருக்கு மானால் எப்படி மருந்து இடுவதென்று சிந்திப்போம். இப்படித் திட்டம் தீட்டினோம். திட்டத்தின்படி, இருவரும் வாரந்தோறும் பேராசிரியரைக் கண்டோம். நூல்களை இரவல் பெற்றோம்; திருப்பித் தந்தோம். பல வாரங்கள் ஓடின. வடுவின் சாயலும் தென்படவில்லை. வகுப்பறைப் பாடங்களின்போதும் எக்காரணம் பற்றியும் பேச்சில் எரிச்சல் மின்னவில்லை. இவ்வளவு 'பெரிய மனிதரா? நம் பேராசிசரியர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/410&oldid=787282" இலிருந்து மீள்விக்கப்பட்டது