பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 375 இடுப்பிலே கதர் வேட்டி; தொள தொள வென்ற கதர் சொக்காய். இக்கோலத்தில் வீற்றிருந்த அப்பெரியவர், காங்கிரசு தியாகி என்று தம்மை எனக்கு அறிமுகம் செய்து கொண்டார். நான் காங்கிரசு ஊழியன்: நாராயணசாமி என்னும் பெயரினன். 'பாரதி' என்னும் திங்கள் இதழை நடத்திக் கொண்டு வருகிறேன். 'கல்கத்தாவிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் "மாடர்ன் ரெவியூ'வைப்போல் 'பாரதி'யைத் தரமான இதழாக நடத்த விரும்புகிறேன். தாங்கள் யாரோ?' என்று கேட்டார். நான், அண்மையில், பொருளியல் சிறப்புப் படிப்பை முடித்தவன். எனக்கு வேலை தேடும் படலம் தொடங்யுள்ளது. தமிழ்ப் பற்று பற்றி இம்மாநாட்டிற்கு வந்துள்ளேன். தங்கள் ஊரைத் தெரிந்து கொள்ளலாமா?' என்று கேள்வி போட்டேன். -- 'அதைச் சொல்ல மறந்துவிட்டேனே. என் ஊரின் பெயர் தேவாரம்; அது மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையத்திற்கு அப்பால் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் இருக்கிறது. தங்கள் பெயர் என்னவோ' என்று திரு நாராயணசாமி கேட்டார். என் பெயரைச் சொன்னேன். அடுத்த வினாடி, 'என்ன சாதி என்றார். சிரித்தபடியே, 'மனித சாதி' என்றேன். நானும் சாதி வேற்றுமை பாராட்டுவதில்லை. சும்மா தகவலுக்குக் கேட்டு வைத்தேன்' என்று சொன்னவர். அதோடு விட்டுவிடவில்லை. அது அவருடைய குறையல்ல. அக்காலப் பழக்கம். சில மணித்துளிகளுக்குப் பிறகு, தமிழ் நாட்டிலுள்ள பெரிய மனிதர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு உறவா. என்று தொடர்ந்து சாதிக் கேள்வியைக் கேட்டபடியே இருந்தார். சூனாம்பேட்டை நிலக்கிழார் திரு அருணாசல முதலியார் முதல் திருநெல்வேலி மேடை தளவாய் குமாரசாமி முதலியார் வரை சொல்லி எனக்கு உறவா என்று கேட்டார். இவர்கள் யாரும் உறவு இல்லை என்று பொறுமையாகச் சொல்லி அந்தேன். என் பதில் பொய் என்று சொல்ல முடியாது. அவர் குறிப்பிட்டவர்களோ மிகமிகப் பெரியவர்கள். நானோமிகச்சிறியவன். அடுத்து வெவ்வேறு சாதிப் பெரியவர்களின் பெயர்களைச் சொல்லி, "ணுக்கு அவர்கள் உறவா என்று விடாமல் கேட்டார். இல்லை என்ற ஒரே பதிலை எல்லாவற்றிற்கும் கூறினேன். 'த்து மணித் துளிகளை வீணாக்கிய பிறகு, சலித்துப் போய், 'எனக்கு எத்தனையோ சுயமரியாதைக்காரர்களைத் தெரியும். அவர்கள் சாதி வேற்றுமை பாராட்டுவதில்லை. ஆயினும், தனியாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/417&oldid=787293" இலிருந்து மீள்விக்கப்பட்டது