பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 381 உடனே சென்னைக்குத் திரும்பி வந்தேன். விடுதியில் உணவுக்கூடத்தை மாற்றிக் கொண்டேன். மாமிச உணவுக்கூடப் பரிசாரகர்கள் என்பால் தனிப்பற்றுக் காட்டினார்கள். மீனும் மாமிசமும் முட்டையும் சாப்பிடுபவர்களிடையே அமர்ந்து, காய்கறிகளை மட்டும் கொரிக்கும் கலையை அப்போது கற்கத் தொடங்கினேன். சில நாள்கள் சங்கடமாயிருந்தது. பிறகு, ஆறுதல் பெற்று விட்டேன். இந்தப் பக்குவம், பிற்காலத்தில், நான் இருபது தடவைகளுக்கு மேல், வெளிநாடுகளுக்குப் போனபோது, எனக்குப் பேருதவியாக இருந்தது. 1932ஆம் ஆண்டு விக்டோரியா மாணவர்விடுதியில் மரக்கறி உணவு உண்போர் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்று வேற்றுமை இல்லாமல் சமபந்தியாகச் சாப்பிடலாம் என்று ஆரம்பித்த முயற்சி அந்த ஆண்டு வெற்றி பெறவில்லை. அடுத்த ஆண்டில் அது வெற்றி பெற்றது. அந்த விடுதியில் பார்ப்பனருக்கு என்று இருந்த தனிச்சலுகை நீக்கப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றேன் பல்கலைக் கழகத் தேர்வுகள் வந்தன. தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னாள் இரவு வழக்கம்போல, ஒன்பது மணிக்கு விளக்கை அனைத்துவிட்டுப் படுத்துவிட்டேன். இரண்டொரு வினாடிகள் கழித்து, என் நண்பர் அகாலாலி அப்பக்கம் வந்தார். என் அடுத்த அறையிலிருந்த திரு தி.அ. இராமகிருஷ்ணனிடம் பேச்சுக் கொடுத்தார். இராமகிருஷ்ணன் ஒர் அச்சத்தை அவரிடம் வெளியிட்டார். அது எனன? 'நெது.சு. வகுப்பில் கவனமாகப் பாடங்கேட்கிறார். விடுதியிலும் சிேறையாகப் படிக்கிறார். இருப்பினும் தேர்வுக்கு முன்னாள், இப்படி அமைதியாகத் தூங்க முடியுமா? ஒன்பது மணிக்கே படுத்துவிட்டாரே 'ஒருகால், தேர்வு எழுதாமல் நின்று விடுவாரோ என்று அஞ்சுகிறேன். படுத்துச் சில வினாடிகளே ஆகின்றன. நாம் இருவருமாகச் சேர்ந்து எழுப்பிப் படிக்க வைக்கலாமா?' என்று இராமகிருஷ்ணன் கேட்டார். 'நெது.சு. தேர்வுக்கு அஞ்சமாட்டார். தமக்கு எவ்வளவு தெரியும் என்பதை நன்கு உணர்ந்தவர். அவருடைய தன்னம்பிக்கையை வீணாகக் *லைக்க வேண்டாம். என்று இலாலி பதில் சொல்லிவிட்டுப் போனார். பேச்சு என் காதில் வீழ்ந்தது. நான் பதில் கூறவில்லை; 'டவுமில்லை. அமைதியாக உறங்கினேன்; வழக்கம்போல, இந்து மணிக்கு எழுந்து ஆயத்தமானேன். தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/423&oldid=787307" இலிருந்து மீள்விக்கப்பட்டது