பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 நினைவு அலைகள் எங்கே சென்றாலும் இல்லை : "வேலை இல்லை' 'வேலை காலி இல்லை என்ற அறிவுப்புகளைக் கண்டோம்; அத்தகைய பதில்களையே கேட்டோம். சில இடங்களில் கிடைத்த பதில்கள் மேலும் அச்சம் ஊட்டும் வகையில் இருந்தன. அவை என்ன? 'பண நெருக்கடியினால் வேலைக் குறைப்பை மேற்கொள்ள நேரிட்டது. மூன்று நான்கு ஆண்டுகள் தொடர்ந்து வேலையில் இருந்தவர்களைக் கூட வீட்டுக்கனுப்பிவிட்டோம். 'அவர்களும் வேறு வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். "எங்கள் அமைப்பில் எப்போதாவது வேலை காலியானல் வேலை நீக்கம் செய்யப்பட்ட அவர்களைத் தேடிக் கொடுக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்த பிறகே வெளியாரைப் பற்றிச்சிந்திக்க முடியும். அந்நிலை அய்ந்தாறு ஆண்டுகளுக்குள் வருமா என்பது பெரிய கேள்விக்குறி.' இப்படிக் கேள்விப்பட்டால் எப்படியிருக்கும்? இக்கால இளைஞர்களுக்கு இது நன்கு புரியும். என் தலைமுறையில் பட்ட வேலையில்லாத் திண்டாட்ட வேதனையைவிட இக்கால இளைஞர்கள் படும் வேதனை பெரியது: கொடியது; நஞ்சானது. என் தலைமுறையில் இப்படி வேலை தேடி அலைந்தவர் களைவிடப் பத்துப் பங்கு பேர்கள் இன்று வேலைக்கு வாயைப் பிளந்துகொண்டு ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் காத்துக் கொண்டிருந்த காலத்தைக் காட்டிலும் நீண்டகாலம் இவர்கள் காத்துக் கொண்டிருக்க நேரிடுமோ என்று அஞ்சுகிறேன். 'கொடிது; கொடிது பட்டதாரிகளுக்கு வேலை இன்மை" இதை உணர்ந்தோர் அருகியுள்ளனர். எனவே, வேலை இல்லாத் திண்டாட்டத்தை விரைந்து தீர்க்கும் அறிகுறிகள் என் கண்களில் படவில்லை. முப்பதுகளில் வேலைக்கு அலைந்து கொண்டிருந்த எங்களில், பெரும்பாலோர், வேலையின்மையால் பட்டினி கிடக்கும் சூழலில் இல்லை. - விலைவாசி வீழ்ந்து கிடந்தது. பெரும்பாலான பட்டதாரிகள் நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். அக்கால நடுத்தரக் குடும்பங்களில் கூட்டுக்குடும்ப உணர்வு மேலோங்கியிருந்தது. குடும்பத்தில், வேலையிருந்த ஒருவர், இருவர். மற்றவர்களைக் காப்பாற்ற அவ்வளவு சுணங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/430&oldid=787324" இலிருந்து மீள்விக்கப்பட்டது