பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 3.89 எனவே, பலர் பல்லைக் கடித்துக்கொண்டு, எப்படியோ காலத்தை ஒட்ட முடிந்தது. - இக்காலப் பட்டதாரிகளில் பலர், எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அரசுகள் வழங்கும பல்வேறு சலுகைகள், உதவிகளைக் கொண்டு, பல்கலைக் கழகப் படிப்பில் ஈடுபட்டவர்கள். பலருக்குப் படிக்கும் காலம்வரை சாப்பாட்டுக் கவலை இல்லை. ஏன்? பெற்ற உதவித் தொகையைக்கொண்டு சாப்பிட முடிந்தது. படிப்பை முடித்து வீட்டுக்குச் சென்றால் பழைய சோற்றுக்கும் பஞ்சம். இது எண்ணற்ற பட்டதாரிகளின் நிலை. சித்திரவதைக்கு ஆளாக்கும் வேலையில்லாத் திண்டாட்ட நிலையே, எருமையிலும் சாதுவான இயல்புடைய பலரைப் புலியிலும் கொடிய வன்முறைச் செயல்களுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் தங்களை வளர்த்துக் கொள்வதை மட்டும் நினைக்கும் காலச் சூழலில், வேலையில்லாது தவிக்கும் பட்டதாரியைக் காப்பாற்றுவோர் எவர்? வேலையில்லாத, வேலைவர வாய்ப்பு இல்லாத காலம் என்று பலரும் சொன்னாலும் சும்மா இருக்குமா நம் உள்ளம் இங்கும் அங்கும் அலையும். நானும் அவ்வாறே அலைந்தேன். திருவனந்தபுரம் பயணம் - வேலைதேடி, திருவனந்தபுரம்வரை போகவும் திட்டமிட்டேன். அப்போது திரு அபிபுல்லா என்பவர் திருவாங்கூர் இராச்சிய திவானாகப் பணிபுரிந்தார். அவர் வடாற்காடு மாவட்டத் தலைநகராகிய வேலூரைச்சேர்ந்தவர். அந்நகராட்சியின் தலைவராகப் புகழுடன் இருந்தவர்; பின்னர், சென்னை மாகாணத்தில் நிர்வாக சபை உறுப்பினராகி நல்ல பெயர் எடுத்தவர். எனவே, இந்து மன்னராகிய திருவாங்கூர் அரசர், இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த திரு அபிபுல்லாவைத் திவானாக நியமித்திருந்தார். வேலூரில் இருந்த என் உறவினர் சிலருக்கு அபிபுல்லா, நெருக்கமானவர். அவ்வுறவினர்களில் ஒருவராகிய திரு மாணிக்க முதலியார் என்னைத் திருவனந்தபுரம் அழைத்துக்கொண்டுபோய் திவானிடம் அறிமுகப்படுத்தி, வேலை வாங்கித்தர முன்வந்தார். 'பொதுவாக நாட்டில் பண நெருக்கடி இருந்தாலும் மன்னர்களின் இராச்சியத்தில், திவான் மனம் வைத்தால், எப்படியும் வேலை கொடுக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/431&oldid=787326" இலிருந்து மீள்விக்கப்பட்டது