பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 395 == திருமணம் முடிந்ததும், சிற்றுண்டி உண்டுவிட்டு மீண்டும் உறங்கினோம். பிற்பகல் உணவருந்திவிட்டு, மலை இறங்கி வந்தோம். நடந்தே வந்தேன். அடுத்த சில நாள்கள், கால்கள் என் வசத்தில் இல்லை. திருமலையில் நடந்த அத்திருமணம் நல்ல திருமணம். பதவிப்பேறு இல்லாவிட்டாலும் பாரியைப்பேறு திரு தொரைபதியுடையதாகும். தொரைபதியின் குடும்பம் அமைதியாக படாடோபமின்றிச் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொண்ணுறு வயதைத் தாண்டியும் பெரியவர் சி. பக்தவத்சலம், வாழ்ந்து வந்தார் என்பது தெம்பூட்டுகிறது. பஞ்சாயத்து மன்றங்களின் தொடக்கம் வேலைகளைப் பற்றிய விளம்பரங்கள் இல்லாவிடினும், செய்திகள் காற்றுவாக்கில் வந்தன. அத்தகைய செய்தி ஒன்று, மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்பதாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஊராட்சிமுறை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அரசால் நியமிக்கப்பட்ட கெளரவ அமைப்பாளர்கள், பெரிய கிராமங்களுக்குச் சென்று, அவ்வூர்களில் ஊர் ஆட்சி மன்றங்களை (பஞ்சாயத்து மன்றங்கள்) அமைப்பார்கள். தொடக்கத்தில் பொதுமக்கள், அதில் அக்கறை காட்டவில்லை. ஊரிலுள்ள பெரிய மனிதர்களை அமைப்பாளரே தேடிப்பிடிப்பார். தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் என்னும் பொறுப்புகளைச் சுமத்துவார். அந்தப் பட்டியலை மேலிடத்திற்கு மாவட்ட ஆட்சிக் குழுவின் தலைவருக்கு அனுப்பி வைப்பார். அவருடைய ஒப்புதல் பெற்று அறிவிப்பார். முதன்முறை, இப்படிப் பிடித்து வைக்கப்பட்டவர்களைக் கொண்டதே பெரும்பாலான ஊராட்சி மன்றங்கள். அடுத்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகு, நாள் குறிப்பிட்டு, பறைசாற்றிவிட்டு, உரிய நாள் தேர்தல் நடக்கும். பல ஊர்களில் போட்டியிட எவரும் முன்வரமாட்டார்கள். தேர்தல் அதிகாரியே பெரும்பாலும் அமைப்பாளரே நாலு பேரையும் கலந்துகொண்டு, சில பெயர்களைத் தேர்தல் *றுப்பினராக்கிவிட்டு வருவார். அப்புறம் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நாடகமும் ஆடப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/437&oldid=787335" இலிருந்து மீள்விக்கப்பட்டது