பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 405 "அற்புதம் ஒன்று நிகழ்ந்து எல்லோருக்கும் வேலை கொடுக்கும் அளவிற்கு வாய்ப்புகள் பெருகும் வரை, இந்த அளவு நியாயமாவது தொடரவேண்டும். இந்த வகுப்புரிமை முறை பற்றி, இன்றையத் தலைமுறை தெரிந்துகொள்வது நல்லது. இந்திய சமுதாயம் சாதிகளின் குவியல். ஒருங்கிணைந்த அமைப் பல்ல. கட்டுமான தலத்தில், செங்கற்கள் ஒருபால்: மணற் குவியல் ஒருபால்; சுண்ணாம்பு ஒரு மூலையில்; மரப்பலகைகள் ஒரு பக்கம்: இரும்புக்கம்பிகள் ஒரு பக்கம், ஆணிகளும் மறைகளும் பாதுகாப்பான மூலையில், இப்படி இருக்கக் காணலாம். அதேபோல், நம் சமுதாயம், பல்வேறு சாதிப் பிரிவுகளாகத் தனித்தனியே குழுமியுள்ளது. அடிமை வேலையில் மோகம் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்னும் குறிக்கோள் தொடக்க காலத்தது. பின்னர் மதிநுட்பம் உடையோர், இந்திய மன்னர்களின் அரசுகளில் கைகட்டிச் சேவகம் செய்ய முன் வந்தனர். ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடிப்பதற்கு முன்னரே முளைத்த அரச அலுவல் ஆசை, அன்னியர் ஆட்சிக்காலத்தில் தழைத்தது. கோழி மேய்த்தாலும் கும்பெனி கோழி மேய்க்க வேண்டும்' என்னும் நாட்டுப்பழமொழி, அப்போக்கினைக் காட்டுகிறது. 'கும்பெனி ஆதிக்கம் மறைந்து, ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பிறகு அரசின் பெரும் பதவிகளில் இந்தியர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டுமென்னும் உரிமைக்குரல் எழுந்தது. அனைத்திந்திய காங்கிரசின் தொடக்க கால மாநாடுகளில் இந்தியருக்குப் பதவிகோரும் முடிவுகள் முன்னின்றதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பதவிகள் கேட்பதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. அவற்றிற்குரிய பயிற்சிகளைப் பெறத் தவறிவிட்டால்தான், தலை குனிய வேண்டும். ஆங்கில ஆட்சி, சில பெரிய பதவிகளையும் அலுவல்களையும் இந்தியருக்குக் கொடுக்கத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி பற்றிருந்தவர்கள் அவ்விடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். பொதுமக்கள், தாய்மொழிக் கல்வியும் பெறவில்லை. எனவே, எந்த அரசின் வேலையையும் பிடிக்கவில்லை. சிலவேளை காவல்காரர் 'ாக, பங்கா இழுப்பவராகச் சேர மட்டுமே முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/448&oldid=787347" இலிருந்து மீள்விக்கப்பட்டது