பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 3. பிற்பகல் இரண்டு மணி! மஞ்சக்கொல்லை நண்பர் திரு. திருநாவுக்கரசு முதலியோர் வீட்டின் விருந்தை வயிறார உண்டு விட்டேன். முதல் நாள் இரவு இரயில் பயணத்தில் தூக்கம் கெட்டது; படுத்ததும் தூங்கி விடலாம் என்று நினைத்தேன். எனவே, இராமன்-இராமன் கம்பெனியின் விருந்தினர் இல்லத்திற்கு என்னைத் திரும்ப அழைத்து வந்த முதலியாரையும் கடலூர் நாராயணசாமி நாயுடுவையும் வெளியில் இருந்தபடியே விடை கொடுத்தனுப்பி விட்டேன்; மாடியேறிச் சென்றேன். ஜிப்பாவைக் கழற்றி வைத்தேன். மின் விசிறியைச் சுழல வைத்தேன். கட்டிலில் படுத்தேன்; தூங்க முயன்றேன்; கண்களை இறுக மூடிக் கொண்டேன். மனக்குரங்குதாவிற்று: விரைந்துதாவிற்று; தொடர்ந்துதாவிற்று: என்ன பாடு படுத்திற்று! மேலே இருந்து அறுந்து எறியப்பட்ட காகித நெருப்பு மாலை, என் தாள் பணிந்ததே வீழ்ந்த இடத்திலிருந்து ஒரு சென்டிமீட்டர் தள்ளி விழுந்திருந்தால்? தரையில் புரண்டு கொண்டிருந்த என் இடுப்பு வேட்டியிலல்லவா விழுந்திருக்கும்? காலடியில் கொழுந்து விட்டெரிந்த காகித மாலையைக் கண்டு எழுந்ததில், நொடிப்பொழுது தாமதித்திருந்தால்? இரண்டாம் முறை பிய்த்து எறியப்பட்ட நெருப்பு மாலை, என் நாற்காலியில் வீழ்ந்ததற்குப் பதில் என் மேலல்லவா வீழ்ந்திருக்கும்? தீ மாலை தோளில் விழுந்தால் என்ன? தாளில் விழுந்தால் என்ன? என் மீது பட்டுப் பற்றியெரிந்திருந்தால்தான் என்ன கெட்டுப் போகும்? திரு ஏ.ஆர். இராமசாமிதமது மணிவிழாவில் கலந்து கொள்ளும்படி நேரில் அழைத்தார். அன்பிற்கு ஆட்பட்டு வந்தாய். உளமார ஊரறிய வாழ்த்தி விட்டாய். அதற்குப் பிறகு தானே தீ விபத்து. அது மட்டுமா? உலகிலும் நீ வந்த வேலை முடிந்து விட்டதே! இன்னும் ஏன் இருக்க வேண்டும்? எவர் உன்னை எதிர்பார்த்து இருக்கிறார்கள்?" நினைவுப் புதையல் என் நினைவுச் சுழல் சுழன்றது! எத்தனையோ எண்ணங்களை வெளிப்படுத்தியது. கடந்தகால நிகழ்ச்சிகள் மின்னின. நான் உயிர் தப்பியது என் பட்டறிவைப் பலரோடும் பகிர்ந்து கொள்ளவோ என்று எண்ணத் துண்டியது. நான் தப்பிப் பிழைத்ததற்கு நன்றிக் கடனாக என் பட்டறிவைப் பலரோடும் பகிர்ந்து கொள்வது கடமை என்ற உணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/45&oldid=787349" இலிருந்து மீள்விக்கப்பட்டது