பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 நினைவு அலைகள் தலைவர்களில் ஒருவரே, வரிந்து கட்டிக்கொண்டு, முத்தய்யாவைத் தோற்கடித்தார். முத்தய்யா நிலைக்கு உயரத் தமக்கு வாய்ப்பு வராது என்று தெரிந்திருந்தும், முத்தய்யாவைத் தோற்கடித்த முதலியாரைப் பற்றி என்ன சொல்ல? இந்து சமயத்திற்கு மெருகூட்டிக் காக்க முயன்ற காந்தியடிகளாரைக் கோட்சே என்னும் இந்துவெறியன்கொன்றதைப் பற்றி என்ன சொல்ல? இந்தியச்சட்டமன்றத்திற்குத் தலைவராக உயர்ந்த முதல் தமிழராகிய சர் ஆர்.கே. சண்முகத்தைக் காலை வாரிவிட்ட செட்டியாரைப் பற்றி என்ன சொல்ல? தான் உயர முடியாது என்று தெரிந்தும் அப்படிச் செய்யலாமா? அனைத்திந்திய நிலைக்குத் தான் உயர முடியாது என்பதை அறிந்திருந்தும், உலகப் புகழ் பெற்றுவிட்ட அனைத்து இந்திய காங்கிரசுத் தலைவராம் திரு காமராசைத் தோற்கடித்த, கடுகு உள்ளம் படைத்த பெரிய நாடாரைப் பற்றி என்ன சொல்ல? 54. தன்மான இயக்கத்தின் சாதனை என்னுடைய வாழ்க்கையில் சிலஅவலப் பருவங்கள் உள்ளன; 1933 ஆம் ஆண்டின் பாதியிலிருந்து 1935 ஆம் ஆண்டின் பாதிவரை, வேதனை செறிந்த காலகட்டங்களில் ஒன்று. வேலையில்லாது அலையும் வேதனை ஒருபால்; அதைக் கண்டு, தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் வலியப் பொழியும் இரங்கல் ஒருபால்! என்னைத் தேடிக் கன்னிப்பெண் உடையார்களின் வருகை ஒரு பால்! காதல் முகிழாதிருப்பினும், பிறந்த 'சாதி யில் திருமணம் செய்து கொள்வதில்லை என்னும் பாறை போன்று அடம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காக்க வேண்டிய நெருக்கடி: ஏமாற்றமடைந்தோரின் எரிச்சலும் புகைச்சலும் ஒரு பக்கம். வாரத்திற்கு ஒரு முறை சேர்ந்து வரும் தமிழ் நாளிதழ்களைத் தவிரப் படிப்பதற்கு ஒன்றுமில்லாத பரிதவிப்பு: பட்டிக்காட்டுத் திண்ணைமேல், ஈ ஒட்டிக் கொண்டிருந்ததால், நேரம் போகாமை! இத்தனையும் சேர்ந்த வெறுப்பும் கசப்பும் பெருக்கெடுத்து ஓடின. இவை போதொதென்று, வெளியுலக அலைமோதல்கள் எனைத் தாக்கின; என் அமைதியைக் கெடுத்தன. அவை எவை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/451&oldid=787351" இலிருந்து மீள்விக்கப்பட்டது