பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 O நினைவு அலைகள் - விருதுநகர் சுயமரியாதை மாநாடு அடுத்த மாகாண சுயமரியாதை மாநாடு விருதுநகரில் திரு ஆர்.கே. சண்முகம் தலைமையில் 1931 ஆகஸ்டில் நடந்தது. இம் மாநாடு இயக்க வரலாற்றில் மற்றோர் திருப்புமுனை என்லாம். ஏன்? இம் மாநாட்டில்தான் முதன்முதலாக மதம் ஒழிப்பு முடிவு எடுக்கப்பட்டது. f விருதுநகர் மாநாட்டின் முதல் முடிவைப் பார்ப்போம். மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள, பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால் அப்படிப் பட்ட எல்லா மதங்களும் ஒழியும்வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு கருதுகிறது. மதம் மறைய வேண்டுமென்பதற்கான காரணங்களைக் காட்டி முடிவு செய்தபின், அடுத்த முடிவை அளந்து எடுத்தது. அது வருமாறு: இந்திய நாட்டில் தோன்றியுள்ள மத வேற்றுமைகளும் பகைகளும் அழிய வேண்டுமானால், அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மத உணர்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமென்று இந்த மாநாடு முடிவு செய்கிறது. கூர்த்த மதியுடையோர் என்று கருதிக் கொள்வோர், பகுத்தறிவு வாதிகளை மடக்குவதாக நினைத்துக்கொண்டு பார்ப்பனரல்லா தாரிடையிலும் மேல்சாதி, கீழ்சாதி என்ற பேத உணர்வு இல்லையா? அதை ஏன் சாடுவதில்லை' என்று கேட்பது உண்டு. விருதுநகர் மாநாட்டு முடிவு ஒன்றைக் கூர்ந்து கவனித்தால் விளக்கம் கிடைக்கும். அம்முடிவு இதோ. தீண்டாமை இந்து சமூகத்திலுள்ள சகல சாதி களையும் பிடித்த நோய். தீண்டாமை ஒழியவேண்டுமானால், 'பிராமணியம் ஒழிய வேண்டுமென்றும் இம்மாநாடு முடிவு செய்கிறது. விருதுநகர் மாநில மாநாட்டையொட்டி மூன்றாவது சுயமரியாதை வாலிபர் மாநாடு நடைபெற்றது. அதன் முதல் முடிவினைப் பார்ப்போம். 'சமதர்ம தத்துவமும் பொதுஉடைமைக் கொள்கையும் நாட்டில் ஒங்க வேண்டும் என்பதே நமது இலட்சியமாயிருக்கின்றபடியால் விதி, கடவுள் செயல் என்பன போன்ற உணர்ச்சிகள், மக்கள் மனத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.' மக்கள் யாவரும் ஒன்றுபட வேண்டுமானால், மதப் பிரிவுகளும் மத சம்பந்தமான பழக்கவழக்கங்களும் அடியோடு ஒழிய வேண்டும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/453&oldid=787353" இலிருந்து மீள்விக்கப்பட்டது