பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 4.15 சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பொதுஉடைமைக் கொள்கையில் எனக்கு என்றும் ஆட்டங்கண்டதில்லை. அது என் இடையறாத உயிர்மூச்சாக உள்ளது என்பது மிகையல்ல. என்னுடைய நாற்பதாண்டு கால அரசு ஊழியத்தில், எல்லா நிலைகளிலும், மயக்கும் சூழ்நிலைகள் பெருகிக் கொண்டே வந்தபோதிலும், மண், பெண், பொன் முதலியவற்றில் நான் நெருப்பாக இருந்ததை முன்னிலைப்படுத்தி பொள்ளாச்சி திரு நா. மகாலிங்கம் என்னைப் பாராட்டி, பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதினார். என்னைப் பாராட்ட நினைக்கிற பலர், இந்த என்னுடைய பற்றின்மையைச் சொல்லி மகிழ்வது எனக்குத் தெரியும். இந்த நெருப்பு நெறி, எப்படி என்னுடையதாயிற்று? எதனால், இன்றளவும் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது? என்னுடைய ஒவ்வோர் அணுவிலும் இரண்டறக் கலந்துவிட்ட பொது உடைமை இலட்சியம், என்னுள் உறங்கிக் கொண்டிருந்த பொருள் பற்றை முற்றாதபடி செய்துவிட்டது. இளமையில் என்னுள் வளர்ந்து வேரூன்றிவிட்ட, பொதுஉடைமைக் கோட்பாடு, காசின்மேல் பற்று ஏற்படாத படி என்னைக் காத்து வளர்த்தது. நேர்மைக்குப் பெயர் பெற்ற குடும்பச் சூழல் துணைநின்றது. ஒழுக்கம் உயர்வு தரும் வேலைக்கு அலைந்து கொண்டிருந்த காலத்திலேயே சமதர்மத்தை வளர்க்கும் பணிக்கு உதவவேண்டுமென்னும் எண்ணம் முகிழ்த்தது. மாதா மாதம் சம்பளம் வாங்கும் ஊழியரோ, தொண்டாகப் பொதுப்பணியாற்றும் தோழரோ எந்த அளவிற்குப் பயன்படுவார்? சுற்றி உள்ளோர், உடன் சேர்ந்து உழைப்போர், தொடர்பு கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோர் ஆகியவர்களிடம் எவ்வளவு நம்பிக்கை பெற்றுள்ளாரோ அவ்வளவிற்கே அவர்கள் பயன்படமுடியும். ஒருவருடைய தொழில்திறனைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படக் *4:யது. அவர்பால் மற்றவர்கள் வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை ஆகும். செல்வர் ஈ.வெ. ராமசாமி மைனராக இருந்தவர். பொது பிாழ்க்கைக்கு வந்த பிறகு எவரும் குற்றங்கான சொல்ல, நினைக்க, வழியில்லாத அளவு ஒழுக்க நோன்புடன் இருந்தார் என்பது உ லகறிந்த உண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/458&oldid=787358" இலிருந்து மீள்விக்கப்பட்டது