பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நினைவு அலைகள் மேலிட்டது. அதிர்ச்சியால் எழுந்த எண்ண அலைகளைப் பொதுச் சொத்தாகப் படைக்கிறேன். வீட்டிற்காக இருக்கத் தேவையில்லை. நாட்டிற்குத்தான் தேவையா? எந்தத் தொண்டு நீ இல்லாமல் சுணங்கி விடப் போகிறது? உனக்கு உன் அனுபவம் பெரிது ஊருக்கு எதற்கு அனுபவம்? யாருடைய அனுபவம் ஊருக்குப் பயன்பட்டது, உன்னுடைய அனுபவம் ஊருக்குப் பயன்பட? எந்தக் கொள்கைக்காக நீ இனியும் உயிர்வாழ வேண்டும்? சாதி ஒழிப்பா? எழுபது ஆண்டுகள் வாழ்ந்தும் அப்பாவியாக இருக்கிறாயே! பிறப்பும் இறப்பும் அற்றதாயிற்றே சாதி. நம் நீண்ட மரபாயிற்றே. நம் கலாச்சாரத்தின் அடிப்படையாயிற்றே. அதை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று இளைஞனாக இருந்தபோது மனப்பால் குடித்தாய். உனக்கு முன்னே வழிகாட்டிய தியாகிகளை நம்பி ஏமாறினாய். அவர்களைப் பின்பற்றி, கலப்புத் திருமணம் என்னும் நெருப்பாற்றில் குதிக்கச் சொன்னது யார்? எதிர் நீச்சல் போடச் சொன்னது யார்? முப்பத்து மூன்றாம் ஆண்டில் இருபதாயிரம் ரூபாய்களுக்கு எத்தனை மதிப்பு அவ்வளவு பணத்தையும் அழகிய பெண்ணையும் கொடுக்க முன்வந்தாரே உன் உறவினர் - செல்வர். என்ன குறை என்று தள்ளிவிட்டாய்? தெரிந்த பெண், நல்ல பெண். ஆயினும் வேண்டாமென்று மறுத்துவிட்டது, வாழத் தெரியாமை அல்லவா? பருவக் கோளாறால் தவறிவிட்டால், தீட்டுக் கழித்துவிடலாம். வேண்டுமென்றே சாதி யொழிப்புக் கொள்கை என்னும் பொய்மான் வேட்டையாடச் சொன்னது யார்? உன் சாதியை ஒதுக்கிவிட்டு வேறு சாதிப் பெண்ணை மணந்தபிறகு 'யானைக்கும் அடிசறுக்கும் என்னமோ வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டாய்; அது பாட்டுக்கும் இருக்கட்டும். நம்ம சாதியில் உனக்குப் பிடித்தமான பெண்ணைப் பார்த்து முடித்து வைக்கிறோம். அதற்காவது ஒப்புக் கொள். இரண்டு குடும்பத்தைக் காப்பாற்றச் சொத்தா இல்லை! == 'நம் உறவினர்களில் இவரைத் தெரியுமே! அவரைத் தெரியுமே! இவர்கள் மட்டுமா? இன்னும் எத்தனையோ பேர்கள், உலகத்தை ஒட்டித் தம் சாதியில் பெண்டாட்டியும், தம் விருப்பப்படி வேறு சாதியில் ஆசைநாயகியும் வைத்துக் கொண்டிருக்கிறார்களே! 'அவர்களை யார் என்ன தப்புச் சொல்கிறார்கள் இது பழக்கமான பாதை யாரும் குறை சொல்லாத வழி. அதனால் நடந்துவிட்டதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/46&oldid=787360" இலிருந்து மீள்விக்கப்பட்டது