பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 B நினைவு அலைகள் காஞ்சி கல்யாணசுந்தரம் காஞ்சி கல்யாணசுந்தரம் தொடக்கத்தில் பெரியாரின் இயக்கத்தில் இருந்தார். அறிஞர் அண்ணா தி.மு. கழகம் கண்டபோது அவரோடு அவ்வியக்கத்துக்குச் சென்றார். நம்நாடு இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் டாக்டர் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நாடாளுமன்ற மேல் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆறு ஆண்டுகாலம் அப்பதவியில் இருந்தார். ஏறத்தாழ ஈராண்டுகளுக்கு முன் மாரடைப்பால் மறைந்தார். அவர் காஞ்சியில் பிறந்து வளர்ந்தவர்; பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். எனக்கு மூத்தவர். எனவே பள்ளிக்கூடப் பருவத்தில் எனக்கு அவரைத் தெரியாது. நான் பட்டம் பெற்றபிறகு காஞ்சிக்குச் சென்றிருந்தேன். அவருடைய தாய் வழித் தம்பி, சிவானந்தம் என்பவர் எனக்கு நெருங்கிய நண்பர். திரு. சிவானந்தம் வீட்டில் திரு கல்யான சுந்தரத்திற்கு நான் அறிமுகமானேன். பிந்தியவர், அப்போது, குமரன் அச்சகக் குப்புசாமியார் நடத்தி வந்த 'கு மார விகடன் இதழை ஆசிரியராக இருந்து நடத்திக் கொண்டிருந்தார். அவ்விதழின் தமிழ்நடை, கலப்படம் குறைந்ததாக இருந்தது. அவ்வழியில் அது முன்னோடியாக விளங்கியது. அதில், நானும் இரண்டொரு கட்டுரைகள் எழுதும்படி செய்தார். திரு கல்யாணசுந்தரனார். | அது, எங்கள் நட்பை வளர்த்தது. நாங்கள் இருவரும் கூடிப் பல முற்போக்கு இலக்கியங்களைப் படித்தோம். திரு காஞ்சி கல்யாணசுந்தரத்திற்கும் எனக்கும் நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நட்பு தொடர்ந்து தழைத்து வந்தது. இடையில், அவர் குமார விகடன் ஆசிரியர் பதவியை விட்டு விட்டு, சென்னை நகை வணிகர் திரு கோவிந்தராஜுலு நடத்திய விநோதன் இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து சென்னையில் தங்கியிருந்தபோது, சிறிதுகாலம் அவர் அறையில் நான் தங்கியிருக்கிறேன். அதற்கு முன்பு, எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தமிழ்நாடு பத்திரிகைத் துணை ஆசிரியர் ஆனேன் ஒருநாள் இருவரும் தனித்தனிப் பெட்டியில் சென்னைக்கு வந்தோம். சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் கண்டோம். இருவரும் ஒன்றாகச் சென்று கவனிக்க வேண்டிய வேலைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/461&oldid=787362" இலிருந்து மீள்விக்கப்பட்டது