பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

■ நெ து. சுநதரவ lo- 427 الات اللاتا قة எனவே, அவருக்கு முதல் இடம் கொடுக்கும் மதிப்பெண்களைத் தந்தாராம். அதைப் பேராசிரியர் எங்களிடம் பலமுறை சொல்லி இருக்கிறார். அதைச் சொல்லி, அண்ணாவை மகிழ்விக்க முயன்றேன். மகிழ்ச்சி தெரியவில்லை. காரணத்தை அவரே சொன்னார். அண்ணா, இறுதித் தேர்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதல் இடத்தைப் பெறும் குறிக்கோளோடு நிறையப் படித்து ஆயத்தஞ் செய்து வந்தாராம். இருப்பினும் தேர்வின் முதல் நாள் வந்த கட்டுரை வினாத்தாள் ஏமாற்றத்தைக் கொடுத்ததாம். எதிர்பார்த்த கேள்வி எதுவும் வரவில்லை. அத்தனையும் எதிர்பாராத கேள்விகள். எவ்வளவு சமாளித்து எழுதியும் இரண்டு கட்டுரைகளை முடிப்பதற்குள் மணி அடித்து விட்டார்கள். கட்டுரைத்தாளில் எதிர்பார்த்த அளவு மதிப்பு எண் கிடைக்காது. அது, தேர்வின் மொத்த நிலையைப் பாதிக்கும். எனவே, அம்முறை தேர்விலிருந்து விலகிக்கொண்டு, அடுத்தமுறை எழுத முடிவு செய்தேன். அப்படியே செய்தேன். உங்கள் பேராசிரியர் எனக்கு முதல் இடம் கொடுத்தது வீணாகிவிட்டது என்று விளக்கினார். வேலைக்குப் போக வேண்டாம் அடுத்து எங்கள் பேச்சு வேலைதேடும் பக்கம் திரும்பிற்று. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வேலை காலியில்லை' என்னும் அறிவிப்புப் பலகைகளையே காண நேரிடுமோ என்று கவலைப்பட்டோம்; விரைவில் நிலைமை நல்ல படி மாறும் அறிகுறிகளே இல்லையே என்று அங்கலாய்த்தோம். அந்நிலையில், தமிழ்நாடு துணை ஆசிரியராகவே தொடர்ந்து வேலை செய்ய முடிவு செய்திருப்பதைக் கூறினேன். அண்ணா அதை வரவேற்றார். மேலும் ஒரு யோசனை, கூறினார். அதிலிருந்து கொண்டே, பொதுமேடைக்கு வந்து சமூகச் சீர்திருத்தத்திற்குத் தொண்டாற்ற வேண்டுமென்றார். எனக்கு அவைக்கூச்சம் அதிகம். அதோடு பேசிப்பழகியதே இல்லை. என் இயல்புக்கு, காட்டாக் குத்துச்சண்டை நடக்கும் இடங்கள் ஒத்துவரா. ஆகவே அலுவலக வேலையோடு இருப்பதே எனக்கு அமைதி கொடுக்கும். முடிந்தால் தமிழ்நாட்டில்' இல்லாவிட்டால் ஏதாவது சிரு அரசு ஊழியத்தில் தொடர்ந்து இருக்க விரும்புவதாகக் கூறினேன். அதை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார் என்று சொல்ல 94.யாது. ஆயினும் தம் எண்ணத்தை என்மேல் திணிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/470&oldid=787372" இலிருந்து மீள்விக்கப்பட்டது