பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 gó) ಕ) ಕTR| ೨| ಹಾ RXósir - அடுத்த நாள் காலை மண்டியின் உரிமையாளர் திரு நாராயணசாமிச் செட்டியார் என்னிடம் பேச, என் அறைக்கு வந்தார். பேச்சுவாக்கில் என் களைப்பைப் புரிந்துகொண்டார்; காரணத்தையும் ஊகித்துவிட்டார். கீழே சென்று என் தம்பியிடம் சில ரூபாய்களைக் கொடுத் தனுப்பினார். தம்பி தானாக வந்து கொடுப்பதுபோல் கொடுத்த பணம் எனக்கு உதவியது. அத்தொகை தீர்வதற்கு முன், என் தந்தை வந்தார். ஏதேதோ பேசினார். பல பெண்களின் தகவல்களைச் சொல்லி அவர்களைப் பார்த்து எவரையாவது தேர்ந்தெடுக்கும்படி கூறினார். பழைய காரணத்தைச் சொல்லி எரிச்சல் ஊட்டினேன். இருப்பினும் அவர், ஊருக்குத் திரும்பும்போது கொஞ்சம் பனங்கொடுத்துவிட்டுப் போனார். அது சில வாரங்களுக்கு வந்தது. இதற்கிடையில், நான் சும்மா இருப்பதை அறிந்த தந்தை ஈ.வெ.ரா. பெரியார், மீண்டும் 'குடிஅரசு அலுவலகத்தில் சேரும்படி திரு சா. குருசாமி வழியாக அழைத்தார். பழைய காரணத்தைச் சொல்லி மீண்டும் மறுத்துவிட்டேன். எவ்வளவு பிழைக்கத் தெரியாதவன் பாருங்கள். 59. பஞ்சாயத்து அலுவலர் பதவி வேலைக்கு மனு தேடுவது கிட்டாது; தேடாதது வலிய வந்து நிற்கும். இது எண்ணற்றோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள். என் வாழ்க்கையிலும் அப்படிப் பல. அரசு வேலைகளில் காலியே இல்லை. நீதிக்கட்சியின் நாளிதழாகிய 'திராவிட னில் இடம் பிடிக்க முயன்றது வீணாயிற்று. தேடாத வேலை 'தமிழ்நாடு இதழில் கிடைத்தது. நினைக்காத வேளை, அதுவும் கைநழுவிவிட்டது. வேலை இல்லாது காத்துக்கிடந்தபோது என் தாய்மாமன் திரு கந்தரசேகரன் திடீரெனச் சென்னைக்கு வந்தார். என்னைத் தேடி வந்தார். திருமணத் துது வந்தாரோ என்று அஞ்சினேன். சில மணித்துளிகளில் அச்சம் அகன்றது. துரது வந்தது திருமணத்திற்கு அல்ல; வேலை பற்றியே. என்ன வேலை உதவிப் பஞ்சாயத்தார் அலுவலர் வேலை. எங்கே? செங்கற்பட்டு மாவட்டத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/475&oldid=787377" இலிருந்து மீள்விக்கப்பட்டது