பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 439 வேலை வாங்கிய பிறகு எப்படி இருப்பான்?' என்று திரு. முத்தய்யாவைப் பார்த்துக் கேட்டார். அவர் வாய் திறக்கவில்லை. அடுத்த மணித்துளி, திரு அருணாசலம் திசை திரும்பினார். 'அப்பா நான் இப்ப மீஞ்சூர் பக்தவத்சலத்தைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன். இப் பையனைப் பற்றி அவரைக் கேட்டுப் பார்க்கிறேன். அப்புறம் இவனுக்கு வேலை கொடுக்கலாமா கூடாதா என்பதை முடிவு செய்யலாம்' என்று மைத்துனர், திரு முத்தய்யாவுக்குச் சொல்லியபடியே, கார் ஏறிப் புறப்பட்டுவிட்டார். நாங்கள், விவேகத்தோடு ஊமையாகிவிட்டோம். அதற்குள் காபி வந்தது. அதைக் குடித்து முடித்ததும் தலைவர் முத்தய்யாவிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம். திரு கே. வேங்கடசாமி பங்களா 'பார்பிகனு'க்கு அருகில இருந்தது? அவரைக் கண்டு, தம் பரிந்துரையை வற்புறுத்த வேண்டாம், என்று வேண்டலாமென்று எண்ணம் மின்னிற்று. அவரைவிட, திருவொற்றியூர் சண்முகமே என் மாமாவிற்கு அதிகம் நெருக்கமானவர். மேலும் அவர் ஆட்சிக் குழுவின் துணைத்தலைவர். அவரைப் பார்த்து, அவரது பரிந்துரையை வற்புறுத்தாதபடி பார்த்துக்கொள்வதே முதலில் செய்ய வேண்டியதென்று முடிவு செய்தோம். பக்தவத்சலனாரின் பரிந்துரை பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்கையில் மாற்று யோசனை பளிச்சிட்டது. மயிலாப்பூருக்குச் சென்று மீஞ்சூர் திரு. பக்தவத்சலம் அவர்களின் உதவியைக் கோருவது நல்லது என்று தோன்றியது. முதலில் அதைச் செய்துவிட்டு மற்றதைக் கவனிப்பது என்று முடிவு செய்தோம். மயிலாப்பூருக்குச் சென்றோம். வடக்கு மாட வீதியில் இருந்த திரு பக்தவத்சலம் வீடு தேடிச் சென்றோம். அவ்வீடு எனக்குப் புதியது அல்ல. தாங்கள் அவ்வீட்டிற்குள் நுழைந்ததும் திரு பக்தவத்சலம் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கக் கண்டோம். அவர் எங்களை அமரச் சொன்னார். அமர்ந்ததும் என் மாமா, நாங்கள் எதற்காக வந்தோம் என்பதை விவரமாக எடுத்து உரைத்தார். திரு பக்தவத்சலம் 'சூனாம்பேட்டை ஜமீந்தார் இங்கே வந்தார்: அவர் போய்ச் சில நிமிடங்களே ஆயின. 'நீ எப்படிப்பட்ட பையன் என்று கேட்டார். நல்ல பையன்' என்று சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/482&oldid=787385" இலிருந்து மீள்விக்கப்பட்டது