பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 445 == கடிதப் போக்குவரத்தைப் பார்த்துப் பதிய எழுத்தர் உண்டா? இல்லை. ஊழியர் உண்டா? இல்லை. உதவிப் பஞ்சாயத்து அலுவலரே எல்லாம். வந்த கடிதங்களை உடைத்துப் படித்துப் பார்க்கும் அவரே அவற்றைப் பதிவு ஏட்டில் குறித்துக்கொள்ள வேண்டும். அதற்குரிய வரிசை எண்ணைப் போடவேண்டும். அதற்குரிய பதிலை எழுதுவது எவர்? உதவி அலுவலரே. மாவட்ட அலுவலகத்தில் உள்ள தலைமை எழுத்தரைக் கலந்து ஆலோசித்து, பதில் எழுதும் பணியும் அதிகாரிக்கே. அதன் படிவத்தைக் கோத்து வைப்பதும் அவர் பொறுப்பு. பதில்களை அனுப்பும் அஞ்சல் செலவுக்கணக்குகளை எழுதி வைக்கும் பொறுப்பும் அவருடையதே. அஞ்சலகத்திற்கு உறைகளைக் கொண்டு சேர்க்கும் வேலை மட்டும் அவரிடம் ஒப்படைக்கவில்லை. பின் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது? கடைநிலை ஊழியரிடம்; ஆம். உதவிப் பஞ்சாயத்து அலுவலருக்குக் கடைநிலை ஊழியர் ஒருவர் மட்டும் உண்டு. நானே அதிகாரியாக, நானே எழுத்தராக, நானே கணக்கராக முத் தொழில் புரிபவராக இயங்க வேண்டியிருந்ததைக் கண்டு மலைக்கவில்லை; வியந்தேன்! திரு தனசிங், அலுவலகத் தலைமை எழுத்தர் திரு இராசகோபாலை அழைத்தார். எனக்கு அறிமுகஞ் செய்துவைத்தார். 'நெ.து.க. என் கல்லூரி நண்பர். அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்: அவருக்கு அப்போதைக்கப்போது உதவி செய்யுங்கள்' என்று ஆணையிட்டார். தவறான பாதை பிறகு, எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு, திருக்கடையூர் இராசகோபால் என்னை அழைத்துக்கொண்டு போனார். அங்கே அமர்ந்ததும் அவர், 'அய்யா! நீங்கள் ஆனர்ஸ் பட்டம் பெற்றவர்கள். நானோ இண்டர்மீடியட்டுக்குமேல் போகாதவன். உங்களுக்கு ஆலோசனை கூறக் கூச்சமாக இருக்கிறது. இருப்பினும் அனுபவத்தை ஒட்டி, மேல் அதிகாரியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, யோசனை சொல்கிறேன். 'ஊராட்சி முறை புதிது. பல தலைவர்கள், பெரிய மனிதர்களே ஒழிய, ஆட்சிப்பழக்கம் இல்லாதவர்கள். அவர்களிடம் இருந்து வரும் 'கங்கள் எப்படியெல்லாமோ இருக்கும்; பல, முறையாக, சிட்டவட்டமாக இரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/488&oldid=787391" இலிருந்து மீள்விக்கப்பட்டது