பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பண்புள்ள ஊராட்சித் தலைவர்கள் முதற்பயணம் பயணம் செய்யத் தொடங்கினேன். முதற் பயணம் எப்பக்கம்? கோவூர், குன்றத்துர் பக்கம். இரண்டு நாள் பயணம் புறப்பட்டேன். "குன்றத்தூர் ஊராட்சி, பேரூராட்சி. அந்த அலுவலகத்தில் இரவு தங்கலாம். ஆகவே இரண்டு நாள் பயணம் போய் வாருங்கள்' என்று தலைமை எழுத்தர், திரு. இராசகோபால் கூறினார். அப்படியே புறப்பட்டேன். 'பிராட்வே பேருந்து நிலையத்தில் குன்றத்துார் செல்லும் பேருந்தில் ஏறினேன். கோவூருக்குப் பயணச்சீட்டு வாங்கினேன். அப்போது தனியார் பேருந்துகளே ஓடின. அக்காலத்தில் சூட் அணிந்தவர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனக்குக் காரோட்டியின் வரிசையில் இடம்கொடுத்தார்கள். இவ்வரிசையில் காலியாக இருந்த மற்றோர் இடத்தில் எவரையும் உட்கார விடவில்லை. அது அதிகாரிக்குக் கொடுக்கும் மரியாதை என்று எண்ணினேன். உரிய நேரத்தில் வண்டி புறப்பட்டது. வழியில் பரங்கிமலை காவல் நிலையத்தண்டைநின்றது. அக்காலத்தில், பேருந்துகளை நடத்துவோர் வழியில் உள்ள காவல் நிலையங்களில் கையெழுத்திட வேண்டும். அதற்காக நடத்துவோர், உள்ளே சென்றார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். அரைமணியாகியும் அவர் திரும்பி வரவில்லை. பேருந்து ஒட்டியிடம் நான் சண்டையிட்டேன். 'நான் பொது அதிகாரி. என் வேலையாகப் போகவில்லை; பொது வேலையாகப் போகிறேன். இனியும் தாமதம் செய்தால், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் செய்யப் போகிறேன்' என்று கடுமையாக மிரட்டினேன். என்ன ஆயிற்று? நான் கண்டனம் தெரிவித்தது வீண் போகவில்லை. பயணிகளில் இருவர் உள்ளே சென்றார். நடத்துபவரையும் மற்றொருவரையும் அழைத்துக் கொண்டு வந்தார். அந்த மற்றொருவர் கண்கள் கனல் கக்கின. அவர் என் பக்கத்தில் இருந்த இடத்தில் அமர்ந்தார். பேருந்து ஒடிற்று. அவர் சினம் தணியவேயில்லை. போரூரை அடைந்ததும் ஒர் வீட்டண்டை நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/490&oldid=787394" இலிருந்து மீள்விக்கப்பட்டது