பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 451 அவர்களில் கந்தசாமி மணஞ்சேரியில் தம்மோடு இருக்கிறார். சிவபாதம் சைதாப்பேட்டையிலிருக்கிறார் என்று தம் குடும்பத்தைப் பற்றியும் கூறினார். அவ்வேளை, நடையில் இருந்து ஒர் அம்மையின் குரல் கேட்டது. 'சாப்பிட வாங்க என்று அவர் அழைத்தார். பெரியவர், அந்த அம்மாளை அழைத்தார். தம் மகள் என்று அறிமுகப்படுத்தினார். அந்த அம்மாள் வெளியே வந்து வாருங்கள் என்றார். அந்த அம்மாளைப் பார்த்தேன்; திடுக்கிட்டேன். ஏன்? அன்று காலை நான் பயணஞ்செய்த பேருந்தில், போரூரில் ஏறியவர் அவரே. கலக்கத்தோடு, 'காலையில் நான் வந்த வண்டியில்தானே வந்தீர்கள்' என்று கேட்டேன். 'ஆம்' என்றார்.அந்த அம்மாள். திரு. முத்துகுமாரசாமி, 'போரூர் பத்ராசல முதலியார் வீட்டண்டைதான் அவர்கள் பேருந்தில் ஏறினார்கள்' என்று சொல்லிக்கொண்டே, உணவு அருந்தப் போகச் சொன்னார். அவர் பத்தியச் சாப்பாட்டில் இருந்தாராம். ஆகவே என்னோடு சாப்பாட்டில் சேரவில்லை. அவர் வீட்டுக் கூடத்தில் உணவு உண்ணும்போது, ஒருவர், உள்ளே துழைந்தார். நுழையும்போதே, 'வாருங்கள், நீங்கள் வருவதற்கு முன்னரே, வந்துவிடலாமென்று பூவிருந்தவல்லிவரை சென்றேன். போன இடத்தில் சற்றுத் தாமதமாகிவிட்டது. அண்ணாராவது இருந்து வரவேற்க முடிந்ததே. நீங்கள் சாப்பிடுங்கள். இரண்டு நிமிடங்களில் நானும் வந்துவிடுகிறேன்' என்று மொழிந்தார். எனக்கோ அதிர்ச்சி! திகைப்பு! ஏன்? காலையில் கோபக்கனல் வீச, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரையே அப்போது கண்டேன். அவர் வீட்டிற்கு உணவிற்கு வர நேர்ந்ததே என்ற அதிர்ச்சி! இவ்வளவு விரைவில் அவர் வெறுப்பை விட்டுவிட்டு, மிகுந்த அன்போடு பழகுகிறாரே, என்ற திகைப்பு. சி-னவு முடிந்ததும் திரு கந்தசாமி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். 'இன்று காலை, நான் பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளரோடு "ாழுது போகாமல் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது யாரோ 29 பயணி நெடுநேரம் காக்க வைப்பதைப் பற்றி வெகுளியோடு பேசுவதாகச் சொன்னார். அப்படி யொருவரை இன்றுதான் காண | உங்களுக்காக நான் விரைந்து வர வேண்டியிருந்தது. அது GTт பெருமைக்கு இழுக்கு என்று வெகுண்டேன். நீங்கள் யார் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/494&oldid=787398" இலிருந்து மீள்விக்கப்பட்டது