பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 நினைவு அலைகள் எவருக்கும் தெரியவில்லை. யார் என்று தெரிந்து கொள்ளாமல், மோத வேண்டாமென்று இருந்துவிட்டேன். 'இன்று மாலை உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பஞ்சாயத்துத் தலைவர் நம் குடும்ப நண்பர். அவர் வழியாக, நீங்கள் நெய்யாடு பாக்கம் சுந்தரசேகரரின் 'மருமகன்' என்று தெரிந்து கொண்டேன். சினம் பறந்துவிட்டது' என்று சொல்லிச் சிரித்தார். மணஞ்சேரி கந்தசாமியும் நானும் காலஞ்செல்லச் செல்ல, நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். திரு. டி.ஜி. சீனிவாசனை முதல் சந்திப்பில் பொருட்படுத்தாது இருந்தேன். பின்னர் நாங்கள் இருவரும் மிக வேண்டியவர்களாகி விட்டோம். அதைப் போன்றே மணஞ்சேரியார் நட்பும் வளர்ந்தது. அரை மணிபோல், அவர்களோடு பேசியிருந்து விட்டு, அலுவலகத்திற்குத் திரும்பினேன். காலையில் அதே வீட்டில் நல்ல சிற்றுண்டி உண்டேன். அடுத்து, நான் போக வேண்டிய ஊர், இரண்டாங் கட்டளை என்பதாகும். இரண்டாங் கட்டளை ஊராட்சி மன்றத் தலைவர் அவ்வூருக்குச் செல்ல, இரட்டை மாட்டு வண்டி கட்டியனுப்ப, திரு. முத்துக்குமாரசாமி முன்வந்தார் அந்த நாட்டுப்புறச் சாலையில் வண்டியில் செல்வதைவிட, நடந்து செல்வதையே விரும்பினேன். எனவே அவ்வூருக்கு நடந்து சென்றேன். இரண்டாங் கட்டளை ஊர்க்கோடியிலேயே, அவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டை அடையாளங் காட்டினார்கள். அவ்வீட்டிற்குச் சென்றேன். வீட்டுக்குரியவர் ஒரு மிராசுதார்; உயர்நிலைப் பள்ளிவரை படித்தவர். அவர் வீட்டில் இருந்தார். அவரைக் கண்டதும் என்னை நானே அறிமுகஞ் செய்து கொண்டேன். ஊராட்சித் தலைவராகிய அவர், என்னை உள்ளே அழைத்துச் சென்றார்; நாற்காலியில் அமரச் செய்தார். ஊராட்சி மன்றக் கணக்குகளையும் பிற பதிவேடுகளையும் என் முன் வைத்தார். அவற்றைத் தணிக்கை செய்யத் தொடங்கினேன். அவ்வேளை, 'நீங்கள் எங்கள் வீட்டில் சாப்பிடலாமா? நாங்கள் ரெட்டியார் இனம்' என்றார், ஊராட்சித் தலைவர். 'நான் யார் வீட்டிலும் உண்பேன். சாதிவேற்றுமை எனக்கு இல்லை' என்றேன். 'அப்படியானால், பகல் உணவை என் வீட்டில் முடித்துவிட்டு: வசதிப்படி அடுத்த ஊருக்குப் போகலாம் என்று சொல்லிவிட்.ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/495&oldid=787399" இலிருந்து மீள்விக்கப்பட்டது