பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 45.5 தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்படி சிலரைக் கட்டாயப்படுத்தி, அவர்கள் பெயர்களை, கூட்டக் குறிப்பில் எழுதி, அதைப் பல வீடுகளுக்கு அனுப்பிக் கையெழுத்துப் பெறுவதும் உண்டு. வரவு செலவுக் கணக்கு நூல், கூட்டக் குறிப்பு நூல் முதலியவற்றை அமைப்பாளர்களே முன் பணம் போட்டு வாங்கிக் கொண்டுபோய், பிடித்துவைக்கப்பட்ட தலைவரிடம் ஒப்படைப்பார்கள். ஊராட்சி மன்றத்தை அமைத்துப் பல திங்களான பிறகே, உரிய செஸ் பணம் வந்து சேரும். பல வேளை தலைவர் தம் பணத்தை முன்பணமாக வைத்து, பதிவேடுகளின் விலையைச் செலவில் எழுதுவார். அக்காலத்தில், செலவினங்கள் பற்றித் திட்டவட்டமான விதிமுறைகள் இல்லை. ஊராட்சி மன்றங்கள் முளைத்தால் போதும்; அவை ஆண்டுக்கு இரண்டொரு பொது வேலைகளையாவது செய்தால் போதும் என்னும் கண்ணோட்டத்தோடு சென்னை மாநில அரசின் உள்ளாட்சி மன்றத்துறை இயங்கியது. பின்னர், மெல்ல மெல்ல, இச்செலவு செல்லும்; அச்செலவு செல்லாது என்பதாக விதிமுறைகள் நுழைந்தன. அவற்றின் தொகுப்புகள், தணிக்கையாளர்களாகிய எங்களிடம் கொடுக்கப்பட்டன. இவ்விதிகளுக்கு முன் நான் இட்ட செல்லுபடி நியாயமல்ல. அதிகாரிகளில் சிறியவர்களாகிய நாங்கள் அதைக் சுட்டிக் காட்ட முடியுமா? பிற்காலத்தில் பல ஆட்சியாளர்கள் எவரோ போட்ட தேவையற்ற சட்டதிட்டங்களைக் காப்பாற்றுவதில் பிடிவாதம் காட்டிக் கெட்ட பெயர் எடுப்பதைப் பார்த்தேன். பேனா எழுப்பிய பிரச்சினை முகலிவாக்கம் ஊராட்சியில் ஊற்றுப்பேனா வாங்கியபோது, இதுபற்றி எந்தவிதமாகவும் ஆணையில்லை. ஊற்றுப்பேனா வாங்க 94. செய்த கூட்டத்தில், அப்பகுதி அமைப்பாளர், திருமுடிவாக்கம் திரு சுந்தரராம அய்யர் கலந்து கொண்டிருக்கிறார்; குறிப்பின் கீழே கையெழுத்திட்டிருக்கிறார். அவர் எத்தகையவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ಶ್ದಿ: ஒரு குறிப்பிட்ட காலத்தில், அன்றைக்கிருந்த அல்லது :" திகளையொட்டி ஒர் அதிகாரி முடிவு எடுத்தால், அதைப வருவோர் மாறிய சூழ்நிலையில், மாறிய கங்க் * , i. த்ேதோட்டத்தால், கிளறுவதே சரியல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/498&oldid=787402" இலிருந்து மீள்விக்கப்பட்டது