பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B நினைவு அலைகள் - --- 'இன்னும் பத்து ஆண்டுகள் தப்புத் தண்டாவில் மாட்டிக் கொள்ளாமல் காலந்தள்ள வேண்டுமே என்ற கவலையால், அச்சத்தால், முன்னர் நெறியாளனாக இருந்தபோது பிடிவாதமாக இருந்தது புரிகிறது. அந்தியத்தில் கூடத் துணிச்சல் வரவில்லையே! காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுக்கத் தெரியாவிட்டால் வாழ்வதெப்படி? "நீயாக வலிந்துபோய் பெரியவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு உதவ வில்லை. போகட்டும். அந்த முட்டாள்தனத்தை மறந்து விடுவோம். தேடிவந்து கேட்ட பெரியவர்களுக்காவது உதவியிருக்கலாம். பச்சையாக உதவ வெட்கமாயிருந்தால் குறிப்புக் காட்டிவிட்டு இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று நடித்து இருக்கலாம். உன்னை நாடிவந்த அசகாய சூரர்கள், தேர்ச்சியை வாங்குவதோடு உனக்கும் ஏதாவது வாங்கிக் கொடுத்திருப்பார்களே பனம் வேண்டாமென்றால், பதவியாவது பெற்றுக் கொடுத்திருப்பார்கள். பெரியவர்கள் சினந்து இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் அவர்களிடம் போய்த் தணிக்கத் தயங்கினாயே! இராசாசி மண்டப விழாவில் மிரட்டினதைப் பொருட்படுத்தாதது குற்றம். பொறுப்பானவர்கள் தூது வந்து காதைக் கடித்தார்கள். உன்னுடன் இருந்தவர்கள் கோடு காட்டினார்கள். அப்புறமாவது ஒர் டாக்டர்' பட்டம் கொடுத்திருக்கக் கூடாதா? ஒன்று என்ன? தாரளமாகவே பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கி, வள்ளலாகியிருக்கலாமே. பந்தியில் உனக்கும் ஒரு டாக்டர் பட்டம் வந்திருக்குமே! என்ன கருமித்தனம்! சரியாகச் சொன்னார், சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு கருமிப் பல்கலைக்கழகம்' என்று! பெரியவர்கள் வீட்டுப் பிள்ளைகளைப் பார்த்து உதவவில்லை. அவர்களை மதித்துப் பட்டங்கள் வழங்கவில்லை. இத்தனையும் போதாதென்று, பெரிய இடத்துப் பரிந்துரைகளைத் தள்ளிவிட்டு, மிதி ரிக்ஷா ஒட்டிக் கொண்டிருந்த, பதவி வேண்டுமென்று கூடக் கேட்காத, ஒர் ஏழை ஆதிதிராவிடப் பட்டதாரியைத் தேடி வேலை கொடுக்கச் சொன்னது யார்? ஒருவரைப் பிடிக்காவிட்டால் அதை உள்ளத்தின் ஆழத்தில் மறைத்துவிட்டு, வெளியே கூடுதலாகவே, நடிப்பவர்களையே பெரியவர்கள் விரும்புகிறார்கள் என்பதை மணிவிழா வயதிலும் கற்றுக் கொள்ளாத நீ, இனி எதைக் கற்றுக் கொள்ளப் போகிறாய்? எதைச் செய்யப் போகிறாய்? உன்னைப்போல், பத்தியம் இருக்க ஆள் இல்லை என்று எண்ணி எமாறியது போதும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/50&oldid=787405" இலிருந்து மீள்விக்கப்பட்டது