பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 457 வம்பு வந்தது மாவட்டப் பஞ்சாயத்து அலுவலருக்கு அனுப்பிவிட்டேன். வேலை ,ாத்தியில்லை என்னும் பூரிப்போடு, அடுத்த பயணத்தைத் தொடங்கினேன். பூரிப்பு நிலைக்கவில்லை; வம்பு வந்து வழிமறித்தது. பல்லாவரத்திற்கு அடுத்து கெளல் பஜார் என்னும் சிற்றுார் இருக்கிறது. அவ்வூரிலும் ஒர் ஊராட்சி மன்றம் வலுவில் இனிக்கப்பட்டது. ■ எவர் எவரையோ பிடித்துத் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் துமைத்துவிட்டு வந்தார், கெளரவ அமைப்பாளர். தானே கனியாத பழத்தைத் தடியால் அடித்துக் கணிய வைக்க முடியுமா? ஊராட்சி மன்றத் தலைவர் பெரிய மனிதர்; நல்லவர். ஆள் சேர்ப்பதில் வல்லவரல்லர். அவர், எவ்வளவு முயன்றும் ஊராட்சி மன்றம் உயிர் பெறவில்லை. போதிய முன்னறிவிப்புக் கொடுத்துக் கூட்டம் கூட்டினாலும், போதிய ஆள்கள் சேர்வதில்லை. 'முடிவை எழுதி, குறிப்பு நூலை அனுப்பி வையுங்கள். அதில் கையெழுத்திட்டு விடுகிறோம் என்ற சொல்லி அனுப்பி விடுவார்கள். சிற்றுாரில் ஆதிதிராவிட உறுப்பினர்கள் பெரிய சாதிக்காரர் வீட்டண்டை வந்து கூடி மன்றத்தை நடத்துவது, அந்தக் காலத்தில் கனவில் மட்டுமே நிகழும். எனவே கூட்டம் கூடாமலே, கூட்டக் குறிப்பு எழுத அப்பெரியவரின் உள்ளம் இடந்தரவில்லை. மொத்தத்தில் சில ஆண்டுகள் வரை அம்மன்றம் செயல்படவே இல்லை. அந்த மன்றத்தைக் கலைத்து விடலாம் என்று மன்றத் தலைவரே, மேல் இடத்திற்கு எழுதிவிட்டார். அக் காலகட்டத்தில், அவரை விட்டால் வேறொருவர் தலைவராகக் கிடைக்கவில்லை. எனவே, ஊராட்சி மன்றம் கலைக்கப்பட்டது. கெளல் பஜார் ஊராட்சியின் நிதி, விதிப்படி அஞ்சலகச் சேமிப்பு வங்கியில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. எந்தவூர் வங்கியில், பல்லாவரம் அஞ்சலக வங்கியில்; மொத்தத் தொகை எவ்வளவு? அய்ம்பது ரூபாய்கள். சீராட்சி கலைக்கப்பட்டதால், தலைவர், பதிவேடுகளை, 'ஆட்டப் பஞ்சாயத்து அலுவலகத்திற்குக் கொண்டுவந்து நேரில்

  • ாத்துவிட்டார்.

L / i H m r ”த்தை என்ன செய்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/500&oldid=787406" இலிருந்து மீள்விக்கப்பட்டது