பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 நினைவு அலைகள் 'மிகக்குறைந்த செலவு, பண ஆணைச் செலவே என்று தோன்றியதால், அது மிகவும் சிக்கனமான முறை என்ற எண்னத்தில் கெளல் பஜாரில் தங்காமல் வந்துவிட்டேன். “எத்தனை நாள்கள் ஆனாலும் எவ்வளவு சிறிய தொகையானாலும் போன ஊரிலே தங்கியிருந்து, பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் வரவேண்டும், அதுவே சரியான சிக்கனம், என்பது மேலிடத்து ஆணையானால் இனி அதை விழிப்போடு செயல்படுத்துவேனென்று பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். இப்படிப் பதில் எழுதினேன். 'நீங்கள் சொல்வது சரிதான்' என்று மாவட்ட அலுவலர் கூறினார். அதை அப்படியே மாவட்ட ஆணைக்குழுவின் செயலருக்கு அனுப்பி விட்டார். விட்டது தொல்லை என்று நினைத்துக் கொண்டேன். எளிதில் விடுமா? சில நாள்கள் ஓடின. அலுவலகம் முழுவதும் கிசுகிசு பேச்சு:துாற்றல். மரியாதைக் குறைவா? 'என்ன இருந்தாலும் அவரவர்க்கு உரிய மரியாதை காட்ட வேண்டாமா? ‘விளக்கங் கேட்டது பொருளற்றது; அது பளிச்சென்று தெரிகிறது. இருந்தாலும் மாவட்ட ஆணைக்குழுத் தலைவர் பெயரில் அல்லவா மெமோ வருகிறது. "அதைப் பார்த்ததும், நேரே சுப் பிரமணிய அய்யரிடம் போய் இருந்தால் அதோடு முடிந்திருக்கும். அவரிடம் போக மனம் ஒப்பாவிட்டால், இரு பட்டங்கள் பெற்ற செயலாளர் நாயுடுவையாகிலும் போய்ப் பார்த்து இருக்கலாமே! 'நாலு பேர்களிடம் கைகட்டி நிற்கத் தெரிந்து கொள்ளாமல் எப்படி வேலை பார்ப்பது? அவருடைய முன்னோர்கள்போல ஊரோடு இருந்து, திண்ணையின்மேல் உட்கார்ந்தபடியே நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கலாமே! வேலைக்கு வந்தபின், இவரையும் அவரையும் பார்த்துச்சரிக்கட்டிக் கொள்ளக் கற்க வேண்டாமா?" இப்படி, கடைநிலை ஊழியர்கள் முதல், கணக்கர்கள் வரையில் பேசினார்கள்; ஆணைக்குழு உறுப்பினர்கள் பேசினார்கள்; அப்படி யென்றும் இவரும் அவருமாகக் காற்றுவாக்கில் சொல்லிவிட்டுப் போனார்கள். எவரும் என்னிடம் நேருக்குநேர் சொல்லவில்லை; திருத்தவில்லை. கற்பனைக் குற்றச்சாட்டுகள். தேவையற்ற ஊசியேற்றல். காது மூக்கு வைத்துத் துாற்றல், புறங்கூறல் ஆகியன தமிழ்நாட்டின் தலையாய குடிசைத் தொழில்; முதன்மையான பொழுதுபோக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/505&oldid=787412" இலிருந்து மீள்விக்கப்பட்டது