பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 நினைவு அலைகள் இப்பயணமும் தொல்லையானது. போய்ச் சேர்ந்த பின் கவலை யில்லை. உணவு கிடைப்பது உறுதி. திருமுடிவாக்கத்தைத் தாண்டியே பழந்தண்டலம் போகவேண்டும். திருமுடிவாக்க ஊராட்சி மன்றத் தலைவர், திரு சுந்தரராம அய்யர். அவர் அதற்கு முன்னால் கெளரவ ஊராட்சி அமைப்பாளராக இருந்தவர். எனவே, அவருடைய கணக்குகள் முறைப்படியும் சரியாகவும் இருக்கும். அவர் வீட்டில் சாப்பிட உடன்படுவது சங்கடத்தில் மாட்டாது. திருமுடிவாக்கத்தை யொட்டிய பழந்தண்டலத்தின் ஊராட்சித் தலைவர் ஒரு செல்வர்; அய்யங்கார். அவர் பெயர் இப்போது நினைவிற்கு வரவில்லை. அவருடைய வைதீக மரபு என் உணர்வுகளைப் புண்படுத்தவில்லை. அவருடைய வீட்டில் சாப்பிடும் போதும் மானப் பிரச்சினை எழவில்லை. அவருடைய கணக்கிலும் வழக்கிராது. மேடவாக்கம் என்னும் ஊருக்கு அக்காலத்தில் போய்வருவது, ஒர் அறைகூவலை ஏற்பதாகும். தாம்பரம் இரயில் நிலையத்தில் இறங்கி, சல்லி போடாத மண்சாலையில் போக வேண்டும். வாடகை வண்டி கிடைப்பதே அரிது. எனவே நடந்தே செல்ல வேண்டும். ஊராட்சி மன்றங்களைத் தணிக்கை செய்யச் செல்லும்போது, முன்னறிவிப் பின்றியே செல்ல வேண்டும். கால்கடுக்க நெடுநேரம் நடந்து, ஒர் ஊருக்குச் சென்றால், அவ்வேளை, ஊராட்சித் தலைவர் ஊரில் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? அன்றிரவுக்குள் வரமாட்டாரென்று அறிவித்தால், பயணம் வீண்; பாடு வீண்; பயனற்ற பயணம் என்று விளக்கம் கேட்கும் கத்தி கழுத்திற்குமேல், இந்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள் ஒருமுறை அப்படி. நடந்தது. தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு அலுத்து மேடவாக்கம் போய்ச் சேர்ந்தேன். ஒரு மணிக்குப் பிறகு, வெளியூர் சென்றிருக்கும் ஊராட்சித் தலைவர் வந்து சேர மூன்று நாள்களுக்குமேல் ஆகலாம் என்று தெரிந்தது. வெட்டியாக, தாம்பரம் திரும்பிச் சென்னைக்குச் செல்வதா, மேடவாக்கத்தில் இருந்து சோளிங்கநல்லூர் செல்வதா என்று குழம்பினேன். திரும்பிப் போகும் தொலைவோடு கொஞ்சம் நடந்தால் சோளிங்கநல்லூர் போய்ச் சேர்ந்துவிடலாமென்று மேடவாக்கத்தார் ஒருவர் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/507&oldid=787414" இலிருந்து மீள்விக்கப்பட்டது