பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 465 சிலர் அதற்கு ஒத்து ஊதினார்கள். அதை நம்பிப் புறப்பட்டேன். நடந்தேன்; நடந்தேன்; வரப்பு, ஏரிக்கரை என்று நாள் முழுவதும் நடந்தேன். அலுத்து வீழும் வேளை, ஞாயிறு மறையவும், நான் சோளிங்க நல்லூரைச் சேரவும் பிழைத்தேன். அந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஊரில் இருந்தார். அது எனக்கு உயிர் கொடுத்த மாதிரி அல்லவா? 65. தந்தையின் வெகுளி! மனம் கலங்கினேன் சோளிங்க நல்லூரில் இரவு தங்கினேன். அடுத்த நாள் முற்பகல், ஊராட்சி மன்றக் கணக்குகளைத் தணிக்கை செய்தேன். மன்றத் தலைவர், செல்வந்தர்; கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருப்பார் என்று தலைமை அலுவலகத்தில் கேள்விப்பட்டேன். எனவே நாயக்கர் வீட்டில் அச்சம் இன்றி உண்டேன். தணிக்கை முடிந்ததும், சோளிங்க நல்லூரிலிருந்து பலகை வாராவதிவரை படகில் பயணம் செய்தேன். அங்கிருந்து குதிரை வண்டி ஏறி, மயிலாப்பூர் கபாலி குளம்வரை சென்றேன். பிறகு, பேருந்து ஏறி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தேன். இளமையின் வலிமை, நீண்ட நடைப்பயணத்தையும் பட்டினி யையும் தாங்கிக் கொள்ள உதவிற்று. அவை அவ்வளவு தொல்லை களாகத் தோன்றவில்லை. ஆனால் பலர், என்னிடம் வலியக் கூறிய இரங்கலும் ஆலோசனை களும் உள்ளத்தைக் கலக்கின. என் குடும்பத்தின் வளத்தையும் தொடர்புகளையும் தெரிந்த பலர், "அப்பா உனக்கேன் இந்தத் தலைஎழுத்து ஊர் ஊராக நாடோடி போல் அலையனுமா? வேளைக்கு ஒருவகை உணவு உண்டால் உடம்பு என்னவாகும் எவ்வளவு செல்லமாய் வளர்ந்தாய்? எவ்வளவு நல்ல மாணவர் விடுதியில் தங்கி உண்டாய் விரைவில் இவ்வேலையை விட்டுவிடு. 'இருந்த இடத்தோடு அலுவல் பார்க்கும் வேலை கிடைக்காமல் போகாது. எதற்கும் நம் முயற்சி வேண்டும்' என்று கூறும்பொழுது, நெருஞ்சி முட்படுக்கையில் புரட்டுவது போலிருக்கும். இருப்பினும் மின்னலோடு போட்டி போட்டுக் கொண்டு, புண் ஆறிவிடும். பற்றுதலோடும் துடிப்போடும் அதே பணியில் மூழ்கி விடுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/508&oldid=787415" இலிருந்து மீள்விக்கப்பட்டது