பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 9 = நம் மக்கள், மண்ணாலான சமுதாயமல்ல, ஒட்டி வாழ்வதற்கு! நாம் அனைவரும் மணற்பெருவெளி. ஒருவரோடு ஒருவர் ஒட்டமாட்டோம். நாம் யார் பேச்சையும் கேட்கப் போவதில்லை. காந்தி பேச்சைக் கேட்டோமா? அவர் பேச்சு சூடுபிடித்துப் பொதுமக்களின் கவனம் சமுதாயக் கொடுமைகள் பக்கம் திரும்பியதும் அவரைச் சுட்டுக் கொன்று விட்டோம். ஏழைப் பங்காளரையாவது நாலு பேர் பின்பற்றினோமா? 'கறுப்புக் காந்தி என்று அன்போடு அழைத்த வடநாட்டவரா, அவரைத் தோற்கடித்து இழிவுபடுத்தினார்கள்? பச்சைத் தமிழர்கள் என்று வெளியே பசப்பிக் கொண்டு, 'இந்த ஏழை ஒழிந்து தொலைந்து போகட்டும். நம் செல்வப் பெருக்கிற்கே வேட்டு வைத்து விடுவார் போல் இருக்கிறதே! இனியும் இவரைப் பசுமையாக, செல்வாக்கோடு விட்டு வைக்கக் கூடாது' என்று தமிழ் முழக்கிகள் அல்லவா அவரைத் தோற்கடித்து அவமானப்படுத்தி மகிழ்ந்தார்கள்? 'சாத்திரச்சழக்கிலே கோத்திரச்சண்டையிலே சிக்கிச் சீரழிதல் அழகு அல்லவே' என்று வள்ளலார்கசிந்து உருகிப் பாடினார். கேட்பாரில்லை; 'கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று நொந்து போனாரே. 'சாதி என்பது கற்பனை; அதை அழிப்பதே என் பணி என்று அரை நூற்றாண்டுக் காலம் ஓயாமல் சுழன்று சுழன்று பேசி, மீண்டும் மீண்டும் எழுதி, பெரியார் ஈ.வெ.ரா. போராடினாரே குலைந்ததா சாதி , களர் நிலமாகிய நம் சமுதாயத்தில் பெரியாரின் ஐம்பதாண்டு பெருமழைக்குப் பிறகும் கொண்டை கட்டியார், தொடை தட்டியார், விரக் கொடியார், கார்காத்தார், ஆற்காட்டார். மறவர், அம்பலக்காரர். அருந்ததியர் என்று பிரிந்து பிரிந்துதானே நிற்கிறார்கள். ஒட்டிய தமிழ்ச் சமுதாயத்தின் முளைகளைக் காணோமே! இவர்கள் இணைந்த இந்தியர்களாக உயர்வது எப்போது? யாவரும் கேளிர் என்று மெய்யாகவே நம்பி நடக்கும் மனிதர்களாக 'ளர்ந்து வைரம் பாய்ந்து நிற்பது என்றைக்கு? எத்தனையோ பெரியவர்கள் முயன்று முடிக்க இயலாத ஒன்றில் சிலையிட உனக்கு எத்தனை கொழுப்பு? மாபெருந் தியாகிகளின் வாழ்நாள் தொண்டே விழலுக்கு இறைத்த நீராகி விட்டது! நீயோ சம்பளக்காரனாக இருந்தாய் இன்றைய நிலையில், அது சாதி இழிவிலும் கொடியது. 'னப்பந்தலில் மட்டும் சிறிதுநேரம் பூணுால் அணிவது போல், "போதாவது ஒரிருமுறை ஏதாவது ஒர் அரசியல் கட்சியில் சேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/51&oldid=787418" இலிருந்து மீள்விக்கப்பட்டது