பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடது. சுந்தாவடிவேலு 467 'நான் இன்னும் என்ன செய்ய?’ என்று கேட்டபடியே, தொடர் சமுதாயத் தொண்டில் தங்களைக் கரைத்துக் கொண்டவர்கள் பளிச்சிட்ட காலம்1. அச் சூழலும் என் தொண்டு வெறியைத் தூண்டிக்கொண்டே இருந்தது. எனவே, உதவிப்பஞ்சாயத்துஅலுவலர்பதவியில் கசப்போவெறுப்போ கொள்ளவில்லை; சலிக்காமல் தொடர்ந்து பணியாற்றினேன். மற்றோர் ஊட்டத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். அக்கால ஊராட்சித் தலைவர்களுக்குப் பேச்சுக்கலை சிறிதளவும் தெரியாது; கள்ளங்கபடம் தெரியாது. சில வேளை தவறு செய்துவிடுவார்கள். அதை மறைக்க ஏதேதோ, எவர் எவர் பேரிலோ சொல்ல மாட்டார்கள். பெரும்பாலோர் குறை காட்டும்போது, 'அப்படிங்களா? இப்போது எப்படி நேர்செய்வதென்று சொல்லுங்கள்; அப்படியே கழுவாய் தேடுவோம்' என்பார்கள். அலுவலில் இருந்த சள்ளையை அந் நேர்மை போக்கிவிடும். இப்படி ஆர்வத்தோடு சில திங்களைக் கழித்தேன். சில ஊர்களுக்குத் தெருவிளக்குப் போட வழி செய்தேன்; குடிநீர்க் குளங்களைச் செப்பனிடச் செய்து குளிர்ந்தேன். தெருக்களில் இருந்த மேடுபள்ளங்களைக் குறைக்க உதவினேன். காலம் கலக்கமின்றி ஓடியது. திருமணத்திற்கு என் பெற்றோர் வற்புறுத்தினர். இங்கும் அங்குமிருந்து பெண் கொடுக்கும் நோக்கத்தோடு சிலர் என்னைத் தேடி வந்தார்கள். இத்தொல்லையைச் சமாளிப்பது ஒன்றே கடினமாகத் தோன்றிற்று. திருப்பெரும்பூதுர் மாற்றல் இப்படி இருக்கையில், திடீரென எனக்கு மாறுதல் ஆணை வந்தது. இல்லை, என் அலுவலகத்தைத் திருப்பெரும்பூதூருக்கு மாற்றி ஆணை வந்தது. அது பெரிய அடி. எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. மாவட்டப் பஞ்சாயத்து அலுவலர் திரு நரசாரெட்டியாரை நெருங்கி ஆலோசனை கேட்டேன். 'நீ தணிக்கை செய்ய வேண்டிய ஊர்களில் மாற்றமில்லை. சைதாப்பேட்டை வட்டத்திலுள்ள பல ஊர்களுக்கும் திருப்பெரும் பூதூர் வட்டத்தின் சில ஊர்களுக்கும் அங்கிருந்தபடியே, நேரே செல்ல முடியாது. அதற்கான வாகன வசதிகள் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/510&oldid=787419" இலிருந்து மீள்விக்கப்பட்டது