பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 நினைவு அலைகள் துடைத்துக் கொண்டு தெளிவு பெறவும், வண்டி, அவ்வூர்க் கனக்குப்பிள்ளை வீட்டண்டை சென்று நின்றது. வீட்டுக்குள்ளிருந்து ஒருவர் வெளியே வந்தார். திண்ணையின்மேல் பாயை விரித்துவிட்டு மின்னலென, வண்டியண்டை வந்தார். என்னை இறக்கி, இட்டுக்கொண்டு போனார். திண்ணையில் உட்காரும் வேளை, காபி குடித்தேன் "நான் கருணிகர் இனம். என் வீட்டில் காபி குடிப்பீர்களா?' என்று கேட்டார். 'காப்பியென்ன, உணவே எவர் வீட்டிலும் உண்பேன்' என்ற நான் பதில் கூறவும், அவர் வீட்டுக்குள் பாய்ந்தார். மறுநொடி தலையணை யொன்றைக் கொண்டு வந்து போட்டார். நான் படுத்துவிட்டேன். முருகேசன், நான் யார் என்பதை அவருக்குக் கூறினார். சில மணித்துளிகளில் உள்ளே சென்று, ஒரு வெண்கலச் செம்பு நிறையக் காபியைக் கொண்டு வந்து கொடுத்தார். மூன்று கோப்பை காபியிருக்கும். ஒரே மூச்சில் அவ்வளவையும் குடித்துவிட்டேன். மறுநொடி படுத்து விட்டேன். அரை மணி நேரம் கழிந்தது; பேருந்து ஒன்று வந்து நின்றது. எங்கே? அருகில் இருந்த காவல் நிலையத்தண்டை. அவ்வூர்க் கணக்கப் பிள்ளை, நான்களைப்பாறுகையில் காவல் நிலையத்திற்குச் சென்றார். நான் யார் என்பதை எடுத்துச் சொன்னார். அடுத்த பேருந்து வண்டியில், எனக்கு எப்படியும் இடம் ஏற்பாடு செய்து திருப்பெரும் பூதூர் அனுப்பி வைக்கும்படி சொல்லிவிட்டு வந்தார். அது, மதிக்கப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட்ட காலம். எனவே, பிள்ளைச் சத்திரம் காவல் நிலையம் எனக்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்தது. நான் பேருந்து ஏறித் திருப்பெரும்பூதூர் போய்ச் சேர்ந்தேன். என் காய்ச்சல் அதிகமாகிவிட்டது. அகாலமாயினும் உள்ளுர் அரசு மருத்துவ நிலைய மருத்துவர் வந்து பார்த்து, மருந்து கொடுத்தார். காய்ச்சலோடு மூன்று நாள்களைக் கழித்தேன். திரு. முத்துலிங்கம், திரு. சின்னசாமி ரெட்டியார், திரு. பாபு ரெட்டியார், கடைநிலை ஊழியர்கள் லோகநாதன், முருகேசன் ஆகியோர் என்னைக் கண்ணினைக் காக்கும் இமையெனக் காத்தனர். நான்காம் நாள் காய்ச்சல் விட்டது. அதோடு முடிந்ததா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/519&oldid=787428" இலிருந்து மீள்விக்கப்பட்டது