பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நினைவு அலைகள் இருக்கவும் தவறிவிட்டாய். எந்தக் கட்சியிலும் எந்த நாளும் உறுப்பினராக இல்லாமல் இருந்தது சிறப்பா? ஆடவேண்டிய ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு, பின்னால் 'பக்தனாக' மாறியவர்களை நாம் மகான்களாக ஏற்றுக் கொள்ளவில்லையா? வேலையை விட்டவுடனாகிலும் ஏதாவது ஒரு கட்சியில் ஏன் சோவில்லை? ஒரு முறைக்கு மூன்றுமுறை தெளிவாகவே, உன் அன்பர் உலகன் ஆலோசனை கூறினாரே! மறைந்தவரைப் புகழ்ந்தால் இருப்பவர்கள் பொறுப்பார்களா? மறைந்துவிட்ட பிறகு அறிஞர் அண்ணாவைப் போற்றியதால், பெரிய இடங்களில் பொங்கிய சினத்தை நீ அறிவாயே! ஏழைபங்காளர் காமராசர் மறைந்த பிறகு அவரைப் பற்றி நூல் எழுதலாமா? அவரைத் தலைவருள் மாணிக்கம் என்று அழைக்கலாமா? அப்புறம் குட்டித் தலைவர்கள் உன்னிடம் நேசம் காட்டுவார்களா? சென்றதினி மீளாது! புதிதாக வாழ்வதற்கு நீ இளைஞன் அல்லனே! உன்னால் ஆன சிறியவை செய்து விட்டாய். அணில் வேலை முடிந்தது. அடுத்து வெளியேறுவதே நல்லது. சோற்றுக்குச் செலவாக, பாரதத் தாய்க்குச் சுமையாக இருப்பதால் ஆவதென்ன? இன்று காலை நடந்த விழாத் தீயில் சிக்கி மறைந்திருந்தால் சிலருடைய சினமாகிலும் வேறுபக்கம் திரும்பியிருக்கும். யார் யாரோ உன்னைத் தமக்குப் போட்டியென்று எண்ணித் துரக்கத்தை இழப்பது நின்றிருக்கும். இந்தத் தினைத்துணை உதவியும் செய்வதற்கும் வாய்ப்பு தவறிவிட்டதே. சல்லி பெறாத இவ்வேடிக்கை வாழ்க்கை இன்னும் எத்துணை நாளைக்கு! என் குரங்கு மனம் இப்படியெல்லாம் என்னைத் தூக்கி எறிந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக, ஐயா, என்ன பலகாரம் வாங்கிவா அய்யர். வேண்டியதை வாங்கித் தரச் சொல்லியிருக்கிறார்' என்று திருவாளர் காசிராமன் அவர்களின் பெட்ரோல் கிடங்கில் வேலை செய்யும் இளைஞர் அன்புடன் இடைமறித்தார். 'வெறும் காப்பி மட்டும் போதும் தம்பி நான் மாலையில் எதுவும் உண்பதில்லை' என்றேன். 'அய்யர் சொல்லியிருக்கிறார். காப்பியோடு கொஞ்சமாக எதாவது பலகாரமும் வாங்கி வருகிறேன்' என்று குழைந்தார் இளைஞர். வழக்கம் போல் அடம்பிடித்தேன். காப்பி மட்டும் கொண்டுவரும் படி கூறி இளைஞரை அனுப்பினேன். படுக்கையில் பு:ாண்டேன். மனக்குரங்கு மீண்டும் தாவிற்கு, அதிர்ச்சி சும்ப ாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/52&oldid=787429" இலிருந்து மீள்விக்கப்பட்டது