பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 - நினைவு அலைகள் சின்னசாமி ரெட்டியாரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, பேருந்து பிடித்துச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தேன். சென்னைப் பொது மருத்துவமனையில் அங்கே பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அதற்கு முன்னர், மருத்துவமனையில் தங்கியது இல்லை. எனவே, இனந்தெரியாத அச்சத்தோடு மருத்துவமனையில் சேர்ந்தேன். என்னைச் சேர்ந்த கூடத்தில் பத்துப் பன்னிருவர் படுக்கைகளில் இருந்தார்கள். அதைப் பார்த்தபோது, ஆறுதல் அடைந்தேன். என் பகுதியைப் பார்த்த மருத்துவர், டாக்டர் சுந்தரம் என்பவர். அவர், நோயாளிகளிடம் பரிவோடு பழகினார். மூன்றாம் நாள் காலை என் காய்ச்சல் தணிந்துவிட்டது. வழக்கமான சோதனைகளைப் பார்த்தபிறகு, 'அளவுமீறிய அலுப்பால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. வேறு கோளாறுகள் ஏதும் இல்லை. ஆகவே, கவலைப்படாதீர்கள் என்று அவரே என்னைத் தேற்றினார். ஆனால் மேலும் ஒரு வாரம் மருத்துவ மனையில் தங்க வைத்து விட்டார். நல்ல ஒய்வு; நல்ல உணவு; நல்ல பரிவு: என்னுடல் தேறிற்று. ஒரே ஒரு குறை. நான் மருத்துவமனையில் இருப்பதைப் பற்றி ஊரிலிருந்த என் தந்தைக்கு எழுதினேன். அக்காலத்திலும் எங்கள் ஊரில், வாரத்திற்கு ஒரு முறையே கடிதங்களைக் கொடுப்பார்கள். நான் கடிதம் எழுதியபோது, எங்கள் ஊரை அடுத்துள்ள செய்யாற்றில் பத்து நாள் பெரு வெள்ளம்: பாலாற்றிலும் ஏழெட்டு நாள்கள் வெள்ளம். ஆகவே நான் மருத்துவமனையில் இருந்தபோது தந்தையோ, மாமாவோ வந்து பார்க்க முடியவில்லை, ஆனால் ஒர் ஆறுதல் கிடைத்தது. என் தாய்வழியில், எனக்கு அண்ணன் முறையான திரு. விசுவநாதன் என்பவர் காஞ்சியில் நெல் மண்டி வைத்திருந்தார். அவர் அடிக்கடி சென்னைக்கு வருவார். அவருக்குத் தகவல் தெரிந்து அவர், இருமுறை மருத்துவமனைக்கு வந்து பார்த்தார். 1933 முதல் 1940 வரை, அவர், எனக்கு உற்ற, நெருங்கிய தோழராகவும் உதவியாளராகவும் விளங்கினார். சென்னையில், திருவல்லிக்கேணிக் கடற்கரையில் திலகர் கட்டத்தில், நாங்கள் இருவரும் திரு. டி.டி. அய்யாசாமி, திரு. தே. ச. குஞ்சித பாதம், அவர் தம்பி பஞ்சாபகேசன், இரயில்வே அஞ்சல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/521&oldid=787431" இலிருந்து மீள்விக்கப்பட்டது