பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 நினைவு அலைகள் 'நெஞ்சி லுரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி' என்று எங்கள் புலவர் சிகாமணியும் சாட்டையடி மகாடுததாா. அநத அடி ஏன் எங்கள் உடலில் உறைக்கப் போகிறது? நாங்கள்தான் காண்டா மிருகத்தின் தோலைப் போர்த்தவர்கள் ஆயிற்றே! ரிஷிகள் வழிவந்து இன்று அடிமைகளாய், கோழைகளாய் வாழும் தோழர்களே! நாடு விடுதலை பெறவேண்டாமா? செழிப்புற வேண்டாமா? பண்டைச் சிறப்பையும் புதுமைச் செல்வங்களையும் பெறவேண்டாமா? அப்படியானால் 'மோனம் என்பது ஞான வரம்பு' என்ற உண்மையை உணர்வோம். 'பேச்சு வெள்ளி; பேசாமை பொன்' என்பதை மனத்திலிருத்து வோம். ஆரவாரத்தை அகற்றுவோம். ஆழ்ந்து ஆலோசிக்கப் பழகுவோம். நிர்மாண வேலையில் சலியாதுழைப்போம்: பகட்டை நீக்குவோம். Yor ੋਂ + நான், திருப்பெரும்பூதுாரில் உதவிப் பஞ்சாயத்து அலுவலராய் இருந்தபோது எந்த ஊராட்சித் தலைவரோடும் பகைமை வளர்த்துக் கொள்ளவில்லை. எல்லோருடைய நேசத்தையும் பெற்றிருந்தேன் என்று சொல்லலாம். நான் அவர்களில் ஒருவனாகவே பழகினேன்; அவர்கள் வீடுகளில், வேற்றுமை பாராட்டாது உண்டேன். சில வேளை அவர்கள் வீட்டுப் பிள்ளையைப் போன்று திண்ணைகளில் உறங்கினேன். அக்கால கட்டத்தில் என்னோடு பழகிய எவரும் என்னைப் பார்த்தும் பாராததுபோல் போனதில்லை; என் மேல் வெறுப்புக் கொள்ள நேர்ந்ததில்லை. எனக்கு வேண்டியவர்கள் இருப்பினும் சிலர் மிகவும் வேண்டியவர்களாக இருந்தார்கள். அவர்களில் சிலரைப் பற்றிச்சுருக்கமாகவாகிலும் குறிப்பிட வேண்டும். திருமுடிவாக்கம் சுந்தரராம அய்யர் எனக்கு மெய்யான நண்பர். எனக்கு அண்ணன்போல் இருந்தவர். சிறுகளத்துார் ஊராட்சி மன்றத் தலைவர், திரு. நாகரத்தினம் என்பால் பெரிதும் அன்பு கொண்டிருந்தார். எனக்கும் அவர்பால் அன்பு நிறைய உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/529&oldid=787440" இலிருந்து மீள்விக்கப்பட்டது