பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 நினைவு அலைகள் பணத்தைக் கட்டிவிடத் தவணை கொடுக்கலாம். வழக்குமன்றம் செல்வது, மற்ற ஊராட்சித் தலைவர்களிடம் பீதியை உண்டாக்கும்' என்று நான் மேலிடத்துக்கு எழுதிப் பார்த்தேன். அது பலிக்கவில்லை. சைதாப்பேட்டை கோட்டாட்சியர் முன்பு வழக்கு வந்தது. அப்போது நிர்வாகமும் நீதித்துறையும் இணைந்து இருந்தன. திரு வீரபத்ர பிள்ளை என்பவர் வழக்கை விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்காக வழக்குரைஞர் திரு ஜகன்னாதன் என்பவர் வாதாடினார். நான் முதல் சாட்சி. வழக்கு மன்றத்தில்தான், பிச்சிவாக்கம் ஊராட்சித் தலைவரை முதன் முறையாகப் பார்த்தேன். குறுக்கு விசாரணை என்னைக் குறுக்கு விசாரணை செய்யும்போது வழக்குரைஞர். 'நீங்கள் பொய்யான நாட்குறிப்பு எழுதுவதில்லையா?' என்று கேட்டார். எனக்கு உலகம் தெரியாத வயது. சினத்தோடு 'அவமதிப்பான இக்கேள்வியை ஆட்சேபிக்கிறேன்' என்றேன். திரு வீரபத்ரபிள்ளை புன்முறுவல் பூத்தார். 'குற்றவியல் வழக்கில் இப்படித்தான் இடக்காகக் கேள்வி கேட்பார்கள். கோபப்படக்கூடாது. மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு' என்றார். வழக்கின் முடிவில் அவருக்குப் பெரிய அபராதம் விதிக்கப்பட்டது. வந்திருந்த உறவினர் ஒருவர் அதைக் கட்டிவிட்டு, அவரை விடுவித்தார். மேற்கூறியவர், பொதுப்பணத்தைத் தீய நடவடிக்கையில் பாழாக்கிவிட்டவர். மற்றொருவர் நிலை வேறு. பொதுப் பணத்தைக் கையாடியவர் குன்றத்துருக்கு அப்பால், திருப்பெரும்பூதூர் போகும் சாலையில் நல்லூர் என்னும் சிற்றுார் ஒன்றிருக்கிறது. அது ஏழ்மையான ஊர். அதன் ஊராட்சித் தலைவருக்குச் சில ஏக்கர் பூமியே உண்டு. அவர் அப்பாவி மனிதர். அவருடைய பஞ்சாயத்திற்குச் சேரவேண்டிய பணம் வந்தபோது, ஊரில் பயிர்வேலைகள் மும்முரமாக நடந்தன. அச்செலவிற்குப் பொதுப் பணத்தைப் பயன்படுத்திவிட்டார். இப்படிக் கையாண்டது அறுபது ரூபாய்களுக்குள். என் தணிக்கையின்போது, அவரே அப்படிக் கூறினார். அதை அப்படியே பதிந்தேன். ஆனது ஆகட்டுமென்ற அசட்டுத் துணிச்சலில். முப்பது நாள்களுக்குள் பணத்தை வங்கியில் கட்டிவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/533&oldid=787450" இலிருந்து மீள்விக்கப்பட்டது