பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 491 அறிவிக்கும்படி எழுதிவிட்டு வந்தேன். அந்தக் கெடுவுக்குள் ஈடுகட்ட அவரால் முடியவில்லை. எனவே, பதிவு அஞ்சலில் அறிவிப்புக் கொடுத்து மிரட்டப்பட்டார். தவனை நீட்டிப்பிற்கு அது ஒரு சாக்கு. அப்போதும் அவரால் அச்சிறு தொகையைச் சமாளிக்க முடியவில்லை. இறுதியில் அவரும் குற்றவாளிக் கூண்டில் நிற்க நேர்ந்தது. அவர் வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருந்தது. வழக்கு மன்றத்தில் நான் சான்று கூற நேர்ந்தது. வழக்கை விசாரித்த திரு வீரபத்ர பிள்ளைக்கு அக்கிழவர்பால் பரிவு பிறந்தது. 'இளங்கன்று பயமறியாது. இவ்வதிகாரி இளம்பிள்ளை. அதனால் முன்பின் யோசிக்காமல் சட்டென்று வயதானவர்களையெல்லாம் வழக்கு மன்றத்தில் நிற்க வைத்து, உள்ளே தள்ளப் பார்க்கிறார்' என்று, இடையே என்னைப் பற்றி விமர்சித்தார். குற்றவாளிக் கூண்டில் இருந்த அந்தக் கிழவர், 'எசமான் அவர் பேரில் நான் குற்றம் சொன்னால் என் கண் அவிந்து போகும். அவருடைய கருணை இல்லாவிடில், இந்நேரம் நான் கம்பி எண்ணிக்கொண்டிருப்பேன். அந்தப் புண்ணியவான் என்னைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றார். என் பொல்லாத வேளை அவர் முயற்சி பலிக்கவில்லை என்று கையெடுத்துக் கும்பிட்டு, கண்ணிர் விட்டுக் கூறினார். 'பரவாயில்லையே! வழக்கு மன்றத்தில் நிறுத்திவிட்டு, நல்ல பேரும் எடுக்கிறீரே என்று நடுவர் கூறினார். வழக்கின் முடிவு என்ன? 'வழக்கு மன்றம் கலையும் வரை சிறை: பெருந்தொகை அபராதம். அதிலிருந்து பஞ்சாயத்துக்குரிய பணத்தை வங்கியில் சேர்த்துவிட வேண்டும் இம்முடிவைக் கேட்டதும் ஆயத்தமாக வந்திருந்த உறவினர் ஒருவர் பணத்தைக் கட்டினார். வழக்கு மன்றம் கலைந்தது. கிழவர் விடுதலையானார். பிறகு அவர் என்னைத் தேடி வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கோரினார். அப்படியும் ஒரு மனிதர் இருந்தார். தவறு செய்தேன் நான் திருப்பெரும்பூதுரில் பணியாற்றுகையில், சட்டமன்றப் பொதுத்தேர்தல் வந்தது. அத்தொகுதியில் திருவொற்றியூர் சண்முகம், திருமதி விசாலாட்சி சாத்திரியும் போட்டியிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/534&oldid=787452" இலிருந்து மீள்விக்கப்பட்டது