பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 நினைவு அலைகள் பிந்தியவர் புதுமுகம். இந்தியத் தேசியக் காங்கிரசின் சார்பில் நின்றார். திரு சண்முகத்தைப் பற்றி எவ்வித அவதூறும் சொல்ல முடிய வில்லை. நல்ல பொதுத்தொண்டு ஆற்றியவர். வீட்டுப் பணத்தைச் செலவு செய்து பொதுத்தொண்டு ஆற்றிக் கொண்டிருந்தார். வழி வழி பெற்ற உணவுப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டு, மரக்கறி உண்ணும் நோன்பினைக் கடைப்பிடித்தார். எளிய மக்களை மதித்தவர். 'காங்கிரசின் சார்பில் கழுதையை நிறுத்தினாலும் வாக்களியுங்கள் என்பதே அப்போதைய தேர்தல் முழக்கம். காங்கிரசு அலை வீசிய அக்கால கட்டத்தில், தொண்டு செய்து பழுத்த பலர் தோற்றார்கள். அதுவரை தொகுதி மக்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத பலர், காங்கிரசின் செல்வாக்கால் வெற்றி பெற்றார்கள். அப்பணியில் திரு சண்முகம் தோற்றார்; திருமதி விசாலாட்சி வென்றார். இந்தத் தேர்தலின்போது நான் ஒரு குற்றத்திற்கு ஆளானேன். தேர்தல்நாள் நெருங்கும்போது ஒரு மாலைப்போது திரு சண்முகம் திருப்பெரும்பூதூரில் என் அலுவலகத்திற்கு வந்தார். என்னைத் தனியாகக் கூப்பிட்டு 'இம் முடிப்பில் மூவாயிரம் ரூபாய்கள் ஒரு ரூபாய் நோட்டுகளாக உள்ளன. உங்கள் பொறுப்பில் வைத்திருங்கள். தேர்தல் நாளன்றோ அதற்கு முன் நாளோ இன்னின்னார் வந்து கேட்டால், சீட்டு வாங்கிக் கொண்டு கேட்ட பணத்தைக் கொடுங்கள்' என்றார். சில பெயர்களை என்னிடம் சொன்னார். நொடிப்பொழுது தயங்கினேன். அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டவன். அவர் என்னைத் தம்மிடம் வேலை செய்யும் ஊழியராக நடத்தியதில்லை. தோழனாகவே நடத்தி வந்தார். o பதினைந்து நாள்களுக்கு ஒரு முறையாகிலும் அவர் இல்லம் சென்று உணவருந்தத் தவறியதில்லை. அப்போது தன்மான இயக்கம் பற்றியே பேசுவோம். அப்படியிருந்தும் தேர்தல வேலையில் சிக்கித் தயங்கினேன். 'நீங்கள் மாவட்ட ஆட்சிக்குழு ஊழியர். மாவட்ட ஆட்சிக் குழுத் தேர்தலில்தான் நீங்கள் தலையிடுவது தவறு. சட்டமன்றத் தேர்தலில் கூட வாக்குச் சேகரிக்க வேண்டாம். இந்தப் பணத்தை வைத்திருந்து கொடுக்கும் உதவி செய்வது தவறல்ல என்றார். நானும் இசைந்தேன். அத்தவறைச் செய்தேன். பிறகே தெளிந்தேன். பிற்காலத்தில் கடும் பத்தியத்தை மேற்கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/535&oldid=787454" இலிருந்து மீள்விக்கப்பட்டது