பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நினைவு அலைகள் திண்டாடினாயே! உன்னோடு வந்த கடைநிலை ஊழியர் - இருளர் கையைப் பிடித்துக் காப்பாற்றிக் கரைசேர்த்ததால் அல்லவா இன்றும் உயிரோடு இருக்கிறாய்? உயிருக்கு ஆபத்து வந்த மூன்று முறையும் உன் சிந்தனையில்லா மலே உன் முயற்சியில்லாமலே, நீ காப்பாற்றப் பட்டிருக்கிறாய். 'முன்னர் நமது இச்சையினாற் பிறந்தோம் இல்லை முதல் இறுதி இடை நமது வசத்தல் இல்லை என்பதை இப்போதாவது ஏற்றுக்கொள் என்று என் எண்ணம் மின்னும் வேளை, சிவபூசையில் கரடி புகுந்தாற்போல், ஆறிப்போகும் முன் சாப்பிட்டு விடுங்கள் ஐயா" என்று சொல்லிக் கொண்டே காப்பியை வைத்தார் இளைஞர். ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். சிந்தனையைத் தட்டிவிட விரும்பவில்லை. எனவே, கையில் கொண்டுவந்த புல்வெளியில் குடிசை என்னும் இரஷ்ஷிய நாவலின் ஆங்கில ஆக்கத்தைப் படிப்பதில் மூழ்கினேன். காலஞ்சென்றது தெரியவில்லை. நன்றி மறவாத காசிராமன் 'உங்களைத் தனியாக விட்டுவிடும்படி ஆகிவிட்டதே என்று வருந்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். காபி, பலகாரம் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டபடியே, திருவாளர் காசிராமன் உள்ளே வந்தார். திரு. காசிராமன், ராமன் ராமன் நிறுவனத்தின் அதிபர்; கும்பகோணம் நகராட்சியின் முன்னாள் தலைவர்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்; காங்கிரஸ் இயக்கத்தின் பெரும்புள்ளிகளில் ஒருவர். அவரோடு நான் நெருக்கமாயிருந்ததில்லை. அவரை அடிக்கடி பார்த்ததுமில்லை. நான் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியில் இருந்து விலகிய சில மாதங்களுக்குப் பிறகு, கும்பகோணத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு எழும்பூரில் இரயில் ஏறினேன். பெட்டிக்குள் என் அறையில் காலடி எடுத்துவைத்தேன். அந்நொடி. 'ஐயா, நான்தான் காசிராமன் என்னைத் தங்களுக்கு நெருக்கமாகப் பரிச்சயம் இல்லை. காலஞ்சென்ற என் தந்தை தங்களுக்கு வேண்டியவராம். அவரே சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். 'தங்களைப் பற்றி எப்போதுமே பெருமையாகப் பேசுவார். தங்கள் உதவியால்தான் கும்பகோணம் சரசுவதி பெண்கள் உயர்நிலைப் பள்ளி வந்ததாம். ஐயா எவ்வளவு தூரம் பயணம் என்று மிகுந்த பணிவோடும் கனிவோடும் விசாரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/54&oldid=787462" இலிருந்து மீள்விக்கப்பட்டது