பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 499 'இவர் பெயர் நெ.து. சுந்தரவடிவேலு. இவர் செங்கற் பட்டு மாவட்டத்தில் உதவிப் பஞ்சாயத்து அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எனக்கு வேண்டியவர்; நம்முடைய தன்மான இயக்கப் பற்றுடையவர். முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிற்கும் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிற்கும் பிரதிநிதியாக வந்து சிறப்பித்தவர். 'நம் இயக்க முடிவுப்படி, சென்ற (1931) குடிக்கணக்கின்போது, தமக்குச் சாதியும் இல்லை சமயமும் இல்லை என்று எழுத்தில் அறிவித்தவர். "இவர் அரசு ஊழியத்தில் சேர விரும்புகிறார். மற்றத் துறைகளில் சேர்வதற்கு வயது கடந்துவிட்டது. கல்வித்துறை ஒன்றில் கிட்டத்தட்ட அய்ந்தாண்டு தவணை இருக்கிறது. எனவே, தம் செலவில் ஆசிரியப் பயிற்சிக்குச் செல்ல விரும்புகிறார். 'ஏதாவதொரு பள்ளிக்கூடம் பரிந்து உரைப்பதோடு, பயிற்சி பெற்று வந்ததும் வேலை கொடுக்கிறோமென்று உறுதி கொடுத்தால் மட்டுமே, விண்ணப்பத்தைக் கவனிப்பார்களாம். 'தங்களிடம் உரிமையோடு உதவி கேட்கலாமென்று எண்ணி, அழைத்து வந்திருக்கிறேன்' இப்படி குருசாமி சொல்லிக் கொண்டிருக்கும்போது, குறுக்குக் கேள்விகள் கேட்காது, தயங்காது தமது முகவரி உள்ள ஒரு கடிதத்தாளை எடுத்தார். மடமடவென்று உறுதிமொழி எழுதிக் கொடுத்தார். கொடுத்தபோது, கல்வியைப் பெற்றுவிட்டால், நம் சமுதாயம் தலைகீழாக மாறிவிடும். நம்மவர்கள் பலர், ஆசிரியர்களாக வந்தால் கல்வி நம் கைகளுக்கு வரும். 'பயிற்சியை முடித்த பிறகு, பிற இடங்களில் ஆசிரியர் வேலை கிடைத்தால் சரி; கிடைக்காவிட்டால், என்னிடம் வாருங்கள். இடம் காலியானால், என் பள்ளியிலேயே சேர்த்துக் கொள்ளுகிறேன். ' என்று சொல்லியனுப்பினார். அதுவரை அவ்வளவு எளிதாக எவரிடமும் உதவி பெற்றதில்லை. அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. திரு செ.தெ. நாயகத்தின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற பிணைப்பைப் பற்றித் திரு. குருசாமிக்குச் சுட்டிக்காட்டினேன். என்ன பிணைப்பு? கொடுத்திருக்கிற உறுதிமொழிப்படி எனக்கு ஆசிரியர் வேலை கொடுக்க இயலாவிட்டால், ஆசிரியர் கல்லூரிக்கு ஈடுப்பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/542&oldid=787469" இலிருந்து மீள்விக்கப்பட்டது