பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 நினைவு அலைகள் 'அரசு அலுவலர்கள், பொது ஊழியர்கள். கட்சிப் போட்டிகளில் நடுநிலை வகிக்க வேண்டியவர்கள். அதிலிருந்து விலகி எந்த வேட்பாளருக்காவது தேர்தலில் வேலை செய்திருந்தால், அது தவறான நடவடிக்கை; தடுத்து நிறுத்த வேண்டிய போக்கு. இதில் ஆளும் கட்சி தெளிவாகவும் உறுதியாகவுமிருக்கிறது. 'எனவே, மேற்கூறிய இரு அதிகாரிகளோடு, என் கவனத்திற்கு வந்துள்ள மற்ற இரு அதிகாரிகளும் இத்தகைய நடவடிக்கைக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று பேசிய திரு ஆற்காடு இராமசாமி மற்ற இரு பெரிய அதிகாரிகளின் பெயர்களையும் சட்டமன்றத்தில் வெளிப்படுத்தினார். 'அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்காக வேலை செய்துள்ளதாகத் தகவல்' என்றும் கூறினார். அது அதிர்ச்சி மருத்துவமாக முடிந்தது. எதிர்க்கட்சி பதறியது. விரைந்து பின்னடைந்தது. 'அரசின் கொள்கை சரியாக இருக்கிறது; அதை நாடறியத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது நல்லது. இது அதிகாரிகளுக்குப் போதிய எச்சரிக்கையாக இருக்குமென்று எதிர்பார்க்கிறோம். இனி எந்த அதிகாரியும் யாருக்காகவும் தேர்தலில் தலையிட மாட்டாரென்று நம்புகிறோம். விவகாரத்தை, இப்போதைக்கு இதோடு முடித்து விடுவோம்' என்று விசாரணையை வற்புறுத்தாமல் எதிர்க்கட்சி விட்டுவிட்டது. இத்தகவலைத் திரு. குருசாமியிடமிருந்து கேள்விப்பட்டபோது எனக்குப் புல்லரித்தது. நேரடியாகத் துணைப்பதிவாளராகத் தேர்ந்தடுக்கப்பட்ட திரு. செ. தெய்வநாயகம், அலுவலில் புலி, நேர்மையில் நிகர் அற்றவர்; எளிமையானவர். வேலை வாய்ப்புகள் அருகியிருந்த அக்காலத்தில், எப்போதாவது இரண்டொரு சிறு பதவிகளில் நியமிக்க வாய்ப்பு கிட்டும். தம் அதிகாரத்திற்கு உட்பட்டதாயின், அவ்வேலையைப் பார்ப்பனரல்லா தா ருக்கே - ஆள் கிடைத்தால், நலிந்த பகுதியினருக்கே கொடுப்பார். அவரை இயக்கிய வெள்ளைக்கார அதிகாரிகள் பரிந்துரைத்தாலும் மற்றவர்களுக்குக் கொடுக்க மாட்டார். தனி வாழ்க்கையில் ஒப்புயர்வற்றவர். இருவேளை மட்டுமே உண்பார். உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிற அய்யர்களிடம் உண்ண மாட்டார். அவுரிலும் கீழானவர்களாக மற்றவர்களால் கருதப்பட்டவர் கள் உணவை ஏற்பார்; அவர்களோடு உண்பார். தம்முடைய அய்ந்து மக்களையும் பட்டதாரிகளாக்கி, அவர்களை ஆசிரியத் தொழிலுக்கு அனுப்பிய அப்பெரியவர் சிக்கனமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/545&oldid=787474" இலிருந்து மீள்விக்கப்பட்டது