பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடது. சுந்தரவடிவேலு 507 எனவே, தனி அறையில் தங்கி ஒட்டலில் உண்ணும் முறை கைவிடப்பட்டது. ஆசிரியர் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி அங்கே உண்பதே சரி' என்னும் அன்பர்களின் அறிவுரையை ஏற்றுக்கொண்டேன். அதற்கு எவ்வளவு பிடிக்கும்? பாட நூல்கள், உடை ஆகியவற்றிற்கு எவ்வளவு செலவாகும்? இப்படிக் கணக்குப் பார்த்ததில், என்னுடைய திங்கள் செலவு, முழுவிடுப்பு ஊதியத்திலும் அதிகம் என்பது புலனாயிற்று. அந்த எச்சச் செலவுக்குப் பணம் கண்டு பிடிக்க வேண்டும். அரைச் சம்பள விடுப்பின்போது, தேடவேண்டிய தொகையோ மேலும் அதிகம். சம்பளமில்லாத விடுப்பின்போது, முழுச்செலவிற்கும் நிதி தேடியாக வேண்டும். அப்போது என் கையில் சேமித்த பணம் இல்லை. கடன் வாங்கும் பழக்கமும் என்னிடம் இல்லை. தந்தையோ, எனக்கு உதவ மறுத்து விட்டார். எனவே, என்னையே நம்பி, புது வழியில் நடைபோட வேண்டியதாயிற்று. அந் நெருக்கடியில் எது உதவிற்று? இத்தகைய நெருக்கடியை எண்ணிப் பாராமல், எப்போதோ, எவரோ தூண்ட நான் மேற்கொண்ட செயல் கைகொடுத்தது. அது என்ன செயல்? நான் செங்கற்பட்டு மாவட்ட ஆணைக் குழுவில், உதவிப் பஞ்சாயத்து அலுவலராகச் சேர்ந்தபோது, அப்பதவி அரசு ஊழியப் பட்டியலில் சேரவில்லை. ஊராட்சி ஊழியப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அத்தகைய பணியில் இருந்தோருக்கு ஒய்வு ஊதியத் திட்டம் இல்லை. மாறாகப் பிராவிடெண்ட் நிதித் திட்டமே இருந்தது. வேலை உறுதி செய்யப்பட்ட அனைவரும் அத்திட்டத்தில் சேரவேண்டும். அதாவது உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, தமது ஊதியத்தில் பதினாறில் ஒரு பங்கை, திங்கள் தோறும் கட்டி வரவேண்டும். வேலை வாங்கும் ஆட்சிக் குழுவும் அதே அளவு பணத்தை ஊழியரின் கணக்கில் போடவேண்டும். அலுவலரோ ஊழியரோ ஒய்வு பெறும்போது அப்படிச் சேர்ந்த தொகைகள், அவற்றிற்கான வட்டியோடு கொடுக்கப்படும். == அக்காலத்தில் எங்களுக்குச்சம்பளம் மட்டுமா கட்டை? மேற் கூறிய சேமிப்புக் கணக்கிற்கு வட்டியும் மிகமிகக் கட்டை. அதுபோக, ஊழியர் விரும்பினால், உறுதி செய்யப்படும் நாள் வரை காத்திராமல் வேலையில் சேர்ந்த நாள் முதல் இருந்தே சேமிப்புச் செய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/550&oldid=787485" இலிருந்து மீள்விக்கப்பட்டது