பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 511 தமது குடி அரசு 7-3-1926 ஆம் இதழில் எழுதிய கட்டுரை யொன்றில், 'இனிக்கொஞ்ச காலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும்போல் இருக்கிறது என்று எச்சரித்தார். அதோடு 1930ஆம் ஆண்டு, நன்னிலத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் இந்தி எதிர்ப்பு முடிவொன்று ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. மறைமலையடிகளாகிய தமிழ் அறிஞர் இந்தி நுழைவால் தமிழ் கெடும்; தமிழர்துன்புறுவர் என்று கட்டுரை வாயிலாக விளக்கி வந்தார். இந்தி வகுப்பில் சேர்ந்தேன் இருப்பினும் பல்லாண்டுகள்வரை இந்தி எதிர்ப்பு மக்கள் இயக்கமாகத் தழைக்காதிருந்தது. பெரியாரின் தன்மான இயக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நான்கூட, மாணவப் பருவத்தில் 1929 இல், சென்னையில் மேற்கூறிய அபேதானந்தா நடத்திய இந்தி வகுப்பில் சேர்ந்தேன். திரு. சி. சுப்பிரமணியம், திரு. அளகேசன் முதலியவர்களுடன் சேர்ந்து, இந்தி கற்றுக்கொள்ள முயன்றேன். எழுத்துகளைக் கற்று, நூறு சொற்களை எழுதும் நிலையை அடையும் வேளை படிப்பு முறிந்தது. ஏன்? எங்கள் ஆசிரியர் அபேதானந்தாவிற்கு அழைப்பு வந்தது; எதற்கு? சென்னையிலிருந்து பீகாருக்கு உடனே திரும்பி வந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்தது. எங்கள் பாடத்தைப் பாதியில் விட்டு விட்டு, அவர் போராடச் சென்று விட்டார். இந்தியைப் பொறுத்தமட்டில் மறு வாய்ப்புக் இட்டாமையால் நான் தற்குறியாகிவிட்டேன். ஆயினும், பல ஊர்களில், சிறுசிறு குழுக்காளவது, விரும்பி, இந்தியைப் படித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் அதன் இயற்கையான வளர்ச்சிக்குத் தீங்கொன்று வந்தது. ஆச்சாரியார் அறிவிப்பு சென்னை மாகாணத்தில், 1937இல் அமைச்சரவை அமைத்த பிரதமர் இராசகோபாலாச்சாரியார், ஒர் அறிவிப்பை வெளியிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/554&oldid=787493" இலிருந்து மீள்விக்கப்பட்டது