பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. கட்டாய இந்தி எதிர்ப்புப் போர் ஊரார் உரையாடல் சிக்கல்களிலிருந்து நழுவி விடுவதைக் கெட்டிக்காரத்தனமாக நினைக்கும் படிப்பாளிகளைப்போல், அவர் நடந்து கொள்ளவில்லை; மழுப்பாமல் தயங்காமல் பதில் சொன்னார். "என் மனத்தில் பட்டதைச் சொல்லி விடுகிறேன். என் கருத்துத் தப்பாக இருந்தால் ஒரு காதில் வாங்கி, மறுகாதில் விட்டு விடுங்கள். 'நாட்டில் படிப்பின் நிலை என்ன? பாதிப்பேர் படிப்பதே இல்லை, நாட்டுப்புறத் தொடக்கப்பள்ளியில் அய்ந்தாவது முடிய ஒரே மொழி தாய் மொழி-மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். அது தவறு என்று சொல்ல மாட்டேன். "ஆனால், நகரங்களில், அதே தொடக்க நிலையில், மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலமும் சொல்லிக் கொடுக்கிறார்கள்' நகரங்களில் குடிசையில் வாழும் குழந்தைகூட இரு மொழிகளைக் கற்றுக் கொள்ளக் காண்கிறோம். நாட்டுப்புறப் பிள்ளைகளில் எங்கோ, இரண்டொரு பிள்ளைகள் தனியாக, வீட்டில் ஆசிரியரை அழைத்து, ஆங்கிலம் கற்றுக் கொள்கின்றனர். அப்படிச் செய்ய முடியாத பெரும்பாலோர், உயர் நிலைப்பள்ளிக்குப் போனால், மூன்றாம் வகுப்பில்தான் சேர முடிகிறது. 'நகரத்துப் பிள்ளைகள் இருமொழிகளைக் கற்றுவிட்டு, ஆறாம் வகுப்பில் சேர்வார்கள். அவர்களுக்கு இந்தி ஒன்றே புது மொழி. 'நாட்டுப்புறப் பிள்ளைகளுக்கோ தனிப்பாட ஆங்கிலம் சரியாக வந்து இராது. எனவே, ஆங்கிலத்தைக் கற்பதிலும் இந்தியைக் கற்பதிலும் ஒரே சமயத்தில் பாடுபட வேண்டும்; மற்றவர்களோடு கடுமையாகப் போட்டியிடவும் வேண்டும். 'பிற எந்த மொழிக்காரருக்கும் இல்லாத ஒரு புதிய தொல்லை, தமிழ் மொழிக்காரர்களுக்கு உண்டு. "இந்தி எழுத்து, ஒலி இரண்டுமே தமிழர்களுக்கு முழுக்க முழுக்கப் புதியன. பத்து வயது பிள்ளைகள் தலையில் புதிய நகரச் சூழ்நிலை, ஒரே சமயம் இரு புதிய மொழிச் சுமைகள் வீழ்ந்தால் அவர்கள் பிழைப்பார்களா? தேர்ச்சி அடைவார்களா? 'பெரும்பாலோர், தேர்ச்சி அடைய மாட்டார்கள். ஆறாம் வகுப்போடு படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஏர் உழ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/556&oldid=787495" இலிருந்து மீள்விக்கப்பட்டது