பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 நினைவு அலைகள் அளக்கும் வேலை பார்க்க, நிறுத்துப்போட, கூலி வேலைக்கு இறங்கி விட வேண்டியதே! நாட்டு புறப் பிள்ளைகள் இக்காலப் படிப்பில் தழைக்காது பட்டுப்போகவே இத்திட்டம் பயன்படும்; வேறெந்த நன்மையும் விளையாது' என்று கூறிக் கொண்டு போகையில், ஊராட்சி உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டார். அவர் தூய்மையான காங்கிரசுக்காரர். கதரைத் தவிர எதையும் அணியாதவர். அவர் தலையிட்டு, 'அப்படியாஅண்ணா நினைக்கிறீர்கள். இந்திப் பாடம் வட இந்திய வேலைகளுக்குப் போக நம் பிள்ளைகளுக்கு உதவுமே என்றார். 'இந்திய அரசில் வேலை வாய்ப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியதே! 'எந்த அளவு படிப்பாளிகளுக்கு, அனைத்திந்திய அலுவல்களில் சேரும் வாய்ப்புகள் அதிகமென்று சிந்திப்போம். பட்டதாரிகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் மிக அதிகம் எனலாம். 'பள்ளியிறுதியோடு படிப்பை நிறுத்தியவர்களுக்கு அவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கா. , 'எட்டாவதோடு நின்று விடுவோர்க்கு இந்திய அலுவல் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. 'தமிழ் இளைஞர்கள், இந்திய அலுவல்களில் சேருவதற்கு உதவ நினைத்திருந்தால் பட்டப்படிப்பில் இந்திப்பாடத்தை நுழைப்பதே அதிகப் பலன் கொடுக்கும் நடவடிக்கையாகும். 'தவறினால், உயர்நிலை வகுப்புகளில் மட்டுமே கற்றுக் கொடுக்கலாம். பட்டப் படிப்பில் ஆகட்டும், உயர்நிலைப் பள்ளியில் ஆகட்டும் தொடக்கத்தில் இந்தியை விருப்பப் பாடமாக்குவதே தந்திரம். 'பயன் கொடுக்கக்கூடிய அவ்விரு மேல்நிலைகளை விட்டு விட்டு, நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது இந்திய அரசுப்பணிகளில் சேர உதவாது. “மாறாக, பொது மக்களின் பிள்ளைகளில் பலர், அய்ந்தாவது ஆறாவது வகுப்புகளோடு படிப்பிற்கு முழுக்குப் போட்டு விடும்படிச் செய்யும். இது நாட்டுக்கு நல்லது அல்ல. 'மக்கள் ஆயிரங்காலத்துப் பயிர்கள் என்பார்கள். எனவே கல்வித் திட்டம் தீட்டுகையில் இக்காலத் தொல்லைகளை, தேவைகளை நினைத்துக்கொண்டு அமைப்பது சரியல்ல. தொலைக் கண்ணோட்டத் தோடு அணுக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/557&oldid=787496" இலிருந்து மீள்விக்கப்பட்டது