பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ-து-சுந்தரவடிவேலு 519 கட்டாய இந்திப் பாடத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பைக் காட்டினர். ஆளுவது நாங்களா? தோற்றுப் போன பெரியார்கட்சிக்காரர்களா? என்றே பல காங்கிரசுத் தலைவர்கள் நினைத்தது விபரீதம். அந்நினைப்பால் உந்தப்பட்டு, முன்னர் அறிவித்தபடியே, அடுத்த கல்வியாண்டில் குறிப்பிட்ட உயர்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டது. இதற்கிடையில் பல தமிழர்களும் பின்னின்று ஊக்க, தந்தை பெரியார் வழிகாட்டலில் இந்தி எதிர்ப்புப் போர் நடத்த முடிவு செய்யப்பட்டது இந்தியைக் கட்டாயமாக்கும் சென்னை தியலாஜிகல் உயர்நிலைப்பள்ளி முன் நாள்தோறும் சில தொண்டர்கள் மறியல் செய்வது என்பது திட்டம். உண்ணா விரதம் இதைத் தொடங்குமுன் பல்லடம் பொன்னுசாமி என்னும் தமிழ்ப்பற்றாளர் பிரதமர் இராசகோபாலாச்சாரியார் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அவர் கைது செய்யப்பட்டார். சிறைத் தண்டனை பெற்றார். அடுத்து ஸ்டாலின் ஜெகதீசன் என்னும் இளைஞர்தியாகராய நகரில் திரு. செ.தெ. நாயகம் இல்லத்தில் தங்கி உண்ணா நோன்பினை மேற்கொண்டார். இவர் திரு. மீ. பக்தவத்சலம், திரு. பி.டி. இராசன், திரு. ஓ. வி. அளகேசன் ஆகியோருக்கு மிக நெருங்கிய உறவு. எனக்கு இனிய நண்பர். அவர் என்னைப் பார்க்க விரும்புவதாகப் பொது நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். பத்துப் பன்னிரண்டு நாள்கள் ஓடின. நான் போய்ப்பார்க்கவில்லை. ஏன்? உண்ணா நோன்பு எனக்கு உடன்பாடல்ல, உண்ணா நோன்பு இருப்பவரைப் பார்ப்பது அதை ஆதரிப்பதற்கு ஒப்பாகும். இப்படிக் கருதியதால் பார்க்கப் போகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/562&oldid=787509" இலிருந்து மீள்விக்கப்பட்டது