பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 521 அவர் உணர்ச்சி வயப்பட்டார்; கைகளைப் பற்றிக் கொண்டார்; தம் கண்பார்வையில் உட்காரும்படி சாடைகாட்டினார்; உட்கார்ந்து காத்து இருந்தேன். இரவு ஒன்பது மணிபோல் விடைபெற்றுக் கொண்டேன். அப்போதும் என்கைகளைப் பிடித்துக்கொண்டு மறுநாளும் வந்துபோக வேண்டினார். தொடர்ந்து மூன்று மாலை அங்குச் சென்றேன். அவரோடு தங்கிவிட்டு வந்தேன். என்ன கண்டேன்? உணர்ச்சிப் பிழம்பான ஆண்களும் பெண்களும் பெரியோரும் சிறியோரும் அமைதியாக வந்து வணங்கிவிட்டுப் போவதைக் கண்டேன். அவருடைய கால்களைத் தொட்டுக் கும்பிட்டவர்களுக்குக் கணக்கில்லை. இது எனக்குப் பிடிக்கவில்லை. மறுபக்கம் பட்டினி கிடந்த ஜெகதீசனைக் காணச் சகிக்கவில்லை. அணுஅனுவாகச் சிதைக்கும் உண்ணா நோன்பு கொடுமையான சித்திரவதை என்பதை நேரில் பார்த்து உணர்ந்தேன். இப்படிப்பட்ட வேதனையான, தற்கொலையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப்பற்றி என்மேல் எனக்கு வெறுப்புப் பொங்கிற்று. சில இரவுகள் தூக்கமின்றித் தவித்தேன். பிறகு நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டேன். அன்று இரவு ஒன்பது மணிக்குப் பிறகும் தோழர் ஜெகதீசனோடு இருந்தேன். _ பார்வையாளர்கள் இல்லை. வீட்டரசி பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டார். நானும் அவரும் மட்டுமே இருந்தோம். அறை வாயிலில் காவற்பையன் உட்கார்ந்திருந்தான். எண்னத்தை வெளியிட்டேன் 'இப்படிச் சித்திரவதைக்கு ஆளாக்கிக் கொள்வது எனக்குப் பிடிக்கவில்லை. இந்தியை எதிர்த்து நீங்கள் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறீர்கள். அதேபோல், வேறொருவர் இந்திக்கு ஆதரவாக நாளை உண்ணா நோன்புமிருக்கலாம். 'இப்படிப்பட்ட பொதுத்திட்டங்கள் சிலருடைய கடுமையான, கொடுமையான நடவடிக்கை மூலம் முடிவு செய்ய விடுவது நலலதலல. 'பொது மக்களுக்கு அறிவூட்ட உண்ணாநோன்பு வழியல்ல. வெறியூட்டவே அது உதவும். இதைப்பற்றி மறுபரிசீலனை செய்வதே எனக்குப் பிடிக்கும்' என்று, மெல்ல மெல்ல தாழ்ந்த குரலில், கெஞ்சும் ஒலியில் சொல்லிவிட்டு விடைபெற்றேன். அடுத்த நாள் இரவும் நெடுநேரம் இருந்து அதே பாணியில் அவர் மனத்தை மாற்ற முயன்றேன்.அவர் எவ்விதப் பதிலும் சொல்லவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/564&oldid=787512" இலிருந்து மீள்விக்கப்பட்டது